Wednesday 29 May 2013

வெளங்காத வீணாப்போன வெடி கலாச்சாரம்..

ஒருவாரகாலமாக எங்கள் ஊரில் திரௌபதை அம்மன் கோவில் திருவிழா பிரம்மாண்டமாகவும் வெகுவிமரிசையாகவும் நடைபெற்று வருகிறது..நேற்று கூத்தாண்டவர் திருக்கல்யாணம் ,இன்று தேர்த்திருவிழா ,நாளை மறுநாள் தீமிதி திருவிழா என்று ஊரே களை கட்டும்..விழாக்களைக் கொண்டாடுவதன் நோக்கமே உழைக்கும் மக்களின் மகிழ்ச்சிக்காகவும் உறவினர்களோடு ஒன்றுகூடி கலந்து பேசி மகிழ்வதற்குமே..இதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..

ஆனால் இந்த திருவிழா காலங்களில் வெடிவிடும் கலாச்சாரம் அதிகரித்து வருவதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..நல்ல விஷேஷத்துக்கும் வெடி வெடிக்கிறாங்க..பிறந்தநாளுக்கும் வெடி ,இறந்த நாளுக்கும் வெடி,அரசியல ஜெயிச்சாலும் வெடி, கிரிக்கெட் மேட்சுல ஜெயிச்சாலும் வெடி..முடியலப்பா..இவங்களாம் இந்த சமுதாயத்துக்கு என்னதான் சொல்ல வராங்கனு தெரியல..

இந்த மூன்று நாட்களில் மட்டும் எங்கள் ஊரில் வெடிக்கப்பட்ட வெடிகளின் எண்ணிக்கை நிச்சயமாக ஆயிரத்தைத் தாண்டும்...நேற்று இரவு சாமி ஊர்வலத்தின்போது பத்து மணி தொடங்கி பன்னிரண்டு மணிவரை தொடர்ச்சியாக வெடி வெடித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகின்றனர்..

மஞ்சள் நீராட்டு விழாவிற்குக்கூட மத்திய மந்திரிகளை அழைத்து வெட்டி பெருமைக்காக வெடிவிட்டு சாகடிக்கிறார்கள்..வளைகாப்புக்கெல்லாம் வார்டு கவுன்சிலரை வரவேற்று வாணவேடிக்கை விட்டு தொல்லை கொடுக்கிறார்கள்..இருந்த பறவைகளை எல்லாம் இப்படி வெடிவிட்டே துரத்தி இயற்கையை அழித்துவிட்டீர்கள் .. இன்னும் என்னென்ன செய்யப்போகிறீர்களோ...


நம்ம இந்தியாவுல மகிழ்ச்சியைக் கொண்டாட அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி வெடிவிடுவதுதான்..இதில் வேற போட்டி போட்டுக்கிட்டு வெடிக்கிறாங்க..கொஞ்சநாள் போன இதுல கின்னஸ் சாதனைலாம் கூட முயற்சி பண்ணுவாங்க போல..யாரோ ஒருவரைக் கூப்பிட்டு ஏன் நீங்கள் வெடிவெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டால் எல்லாரும் வெடிக்கிறாங்க நானும் வெடிக்கிறேன் என்பதுதான் பதிலாக இருக்கும்..

நம் மனிதர்களை ஆட்டு மந்தையோடு கூட ஒப்பிடமுடியாது..இப்ப இருக்கற ஆடுலாம் கூட தெளிவா இருக்கு..ஒரு ஆடு பள்ளத்தில் விழுந்தால் எந்தவொரு ஆடும் பின்னால் வரிசையாக சென்று விழுவதில்லை..ஆனால் மனிதன் மட்டும்தான் யாரோ ஒருவர் குழியில் விழுந்தால் வரிசையாக பின்னால் சென்று விழுகிறார்கள்.. உலகின் பகுத்தறிவற்ற ஒரே உயிரினம் மனித இனம் மட்டுமே..

இருக்கும் ஒலிமாசுபாடும் காற்றுமாசுபாடும் போதாதா..ஏன் இப்படி தினமும் பட்டாசுகளையும் வெடிகளையும் வெடித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்திக்கொண்டிருக்கிறீர்கள்..இல்லை இல்லை நீ சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்கமாட்டோம்..நாங்கள் இந்தியநாட்டின் பரிபாலணங்களையும் பண்பாட்டையும் கட்டிக்காப்பாற்றியே தீருவேன் என்கிறீர்களா...இருநூறு வெடி விட நினைக்கிறீர்களா..அதை ஐம்பதாக குறைத்துக்கொள்ளுங்கள்..மீதிப்பணத்தை ஏதாவது ஒரு அனாதை இல்லத்திற்கு வழங்கி உங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடலாமே.. அரசியலில் வெற்றி அடைபவர்கள் பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி உங்கள் மகிழ்ச்சியைப் பகிரலாமே..

ஏதோ நான் சொல்லறத சொல்லிட்டன்..இரண்டு பேராவது பின்பற்றினால் எனக்கு மகிழ்ச்சியே...அடுத்த பதிவில் தொடர்கிறேன்..நன்றி..

9 comments:

  1. வெடியே வேணாம்ன்னு சொல்லுங்க...

    ReplyDelete
  2. சுற்றுச்சூழல் மீதான உங்கள் கவலைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. ஆமாங்க!நல்லதுக்கும் வெடி;கெட்டதுக்கும் வெடி!

    ReplyDelete
  4. ஒரு அரசியல்வாதியிடம் கேட்டேன் தேர்தலப்ப தாரை தப்பட்டை ,வெடின்னு ரகளை பண்ற கலாச்சாரம் இல்லாம நாகரீகமா ஓட்டு கேட்க மாட்டிங்களா என்றேன்.. அதற்கு அவங்க சொன்னாங்க... இங்க நம்ம நாட்ல அப்படி போனாதான் அவங்கவங்க 'பவரை' காமிக்கற மாதிரி இருக்குமாம். நம்ம ஜனங்க அப்படிதான்னார். சுற்று சூழலும் மாசு படுது.. தேவையில்லாத ஆர்ப்பாட்டங்களால் சுற்றி இருக்கறவங்களுக்கு இடைஞ்சலாவும் இருக்கும்.

    ReplyDelete
  5. .இருநூறு வெடி விட நினைக்கிறீர்களா..அதை ஐம்பதாக குறைத்துக்கொள்ளுங்கள்..மீதிப்பணத்தை ஏதாவது ஒரு அனாதை இல்லத்திற்கு வழங்கி உங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடலாமே.. அரசியலில் வெற்றி அடைபவர்கள் பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி உங்கள் மகிழ்ச்சியைப் பகிரலாமே..//


    நல்ல கருத்து.

    ReplyDelete
  6. அரசியலில் வெற்றி அடைபவர்கள் பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி உங்கள் மகிழ்ச்சியைப் பகிரலாமே..

    பசுமையான கருத்துகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்..கொஞ்சம் வேலைப்பளு..

      Delete