Sunday 10 April 2016

சில்லறை வணிக அரசியலைத் தடுப்போம்.

நீண்ட காலத்திற்குப் பிறகு பதிவுலகம் பக்கம் தலை காட்டுகிறேன்.அனைவருக்கும் வணக்கம். சமீபத்தில் தோழி பிரியா அவர்களின் பதிவில் சில்லரை வணிக அரசியல் பற்றி கோபமாக சாடியிருந்தார்..ஆம் அவர் கூறியது அனைத்தும் உண்மையே..தினம் தினம் நாம் ஒவ்வொருவரும் கேட்கத் திராணியின்றி ஏமாந்து கொண்டிருக்கிறோம். இன்று கூட வீட்டிற்கு அருகிலுள்ள பேக்கரியில் பால் வாங்கியபோது மீதி சில்லரை கொடுக்காமல் சாக்லேட் கொடுத்து ஏமாற்றுகின்றனர்..நாம் கேள்வி கேட்டால் நீங்கள் சில்லரையாகக் கொடுங்கள் என்பதாக இருக்கும்.அல்லது நம்மை கேவலமாக ஒரு பார்வ பார்ப்பார்கள். நம்முடைய ஆதங்கமெல்லாம் நம்மை ஒரு வார்த்தை கூட கேட்காமல் நமது பணத்தை எடுக்க அவர்களுக்கு யார் உரிமை தந்தது.இன்று ஐந்து ரூபாய் கூட மதிப்பில்லாத சில்லரையாகி விட்டது.அஞ்சு ரூபா சில்லரை இல்ல ஏதாச்சும் வாங்கிங்கோங்க என்கிறார்கள்.தரமான பொருளைக் கொடுத்தாலும் பரவாயில்லை.கம்பெனி பெயரே தெரியாத வீணான பொருள்தான் சில்லரைக்குப் பதில் கொடுக்கப்படுகிறது.பல இடங்களில் சில்லரை இருந்தால் கூட கொடுப்பதில்லை.காய்கறிக்கடை ,மளிகைக்கடை ,பால் வாங்கும் இடம், திண்பண்டக்கடைகள் என்று ஒவ்வொரு இடத்திலும் சில்லரை கொடுக்கப்படாமல் நம் பணம் சுரண்டப்படுகிறது.ஒரு காலத்தில் இதைக்கண்டு போகும் இடத்திலெல்லாம் மனதிற்குள் கோபப்பட்டுதான் வீட்டிற்கு வருவேன்.ஆனால்இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் பாக்கெட்டில் பத்து ரூபாய் சில்லரையோடுதான் செல்கிறேன்.அவர்கள் சாக்லேட் கொடுப்பதற்கு முன் நான் சில்லரையைக் கொடுத்து விடுகிறேன். நம் பணத்தை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.நமக்கே இப்படி இருக்கிறது என்றால் ஒருநாளைக்கு வெறும் ஐந்து ரூபாய்க்கெல்லாம் கஷ்டப்பட்டு வேலை செய்த நம் முன்னோருக்கு எப்படி இருக்கும்..இனி கடைக்குச் செல்லும்போது சில்லரைக் காசோடு செல்வோம்.சில்லறை வணிக அரசியலைத் தடுப்போம். கஷ்டப் பட்டு உழைத்து சம்பாதிப்பவர்கள் நிச்சயமாக யோசிப்பீர்கள் என்று நம்புகிறேன். பின்னூட்டத்தில் விரிவாக அலசுவோம்.அன்புடன் உங்கள் கலியபெருமாள்...