EVERY HOME HAS A SKELETON IN ITS CUPBOARD என்றொரு பழமொழி உண்டு ஆங்கிலத்தில்..வீட்டுக்கு வீடு வாசற்படி என்பார்கள் தமிழில் அழகாய்...ஆம் பிரச்சினைகள் இல்லாத குடும்பங்களும் இல்லை ,மனிதனும் இல்லை..ஆனால் இந்தியாவில் மனிதனால் கடைசி வரை தீர்க்கவே முடியாத இரண்டு பிரச்சினைகள் உண்டென்றால் அது கடன் பிரச்சினையும் ,மாமியார் -மருமகள் பிரச்சினையும்தான்.
.நீ என்னப்பா பொம்பள மாதிரி லேடிஸ் பிரச்சினை பத்திலாம் பேச ஆரம்பிச்சட்ட என்று கேட்பது புரிகிறது...ஆனால் இப்பிரச்சினையால் நடுவில் மாட்டிக்கொண்டு இருதலைக்கொள்ளி எறும்பாய் சிக்கித்தவிப்பது நாம்தானே....கண்டுபிடிச்சீட்டீங்களா..(ஆமாம் அதேதான் நம்ம வூட்லயும் இதே பிரச்சினைதான்..)
அந்தக்காலத்தில் நிறைய கல்வியறிவில்லாக் காலத்தில் மட்டுமல்ல வளர்ந்துவரும் இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் தீர்க்கமுடியாத ஒரே பிரச்சினை இந்த மாமியார்-மருமகள் பிரச்சினைதான்...
இப்பிரச்சினைக்கெல்லாம் ஒரே காரணம் ஈகோ பிரச்சினைதான்..விட்டுகொடுக்கும் மனப்பான்மை இருவரிடமுமே இல்லாமல் போவதுதான்...ஆண்டு அனுபவித்து பல்வேறு அனுபவங்களைப் பெற்ற பெரியவர்களே விட்டுக்கொடுத்து போகாதபோது இருபது வயது மருமகளிடம் எப்படி விட்டுக்கொடுக்க எதிர்பார்க்க முடியும்...
நான் என் மனைவியிடம் அடிக்கடி சொல்லுவேன்...ஆயிரம் ஆம்பளங்க இருந்தாலும் அந்த இடத்துல எந்த பிரச்சினையும் வராது..ஆனா ரெண்டு பொம்பளங்க போதும் ஒரு ஊரே அழியறதுக்கு என்று...(நல்ல மாமியார் மருமகள் யாராச்சும் இருந்தா அடியேன அடிக்காம மன்னிக்கனும்)
முக்கியமாய் பிரச்சினை வரும் ஒருசில காரணங்களை இங்கே பட்டியலிடுகிறேன்..அவை எல்லா காலத்திற்கும்,எல்லாருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்..
1.மாமியார் சொன்ன சாப்பாட்டை மருமகள் செய்யவில்லை.
2.வேறு யாரையோ திட்டும்போது தன்னைத்தான் திட்டுகிறார்கள் என்று நினைத்துக்கொள்வது(உண்மையிலும் அப்படி நடப்பதுண்டு)..
3.தன் வீட்டார் வரும்போது மாமியார் அவர்களிடம் பேசாமல் அவமதிப்பது..
4.சரியான நேரத்திற்கு சாப்பாடு தயார் செய்யாமல் அல்லது பரிமாறாமல் இருப்பது..
5.புதிதாக முளைத்திருக்கும் பிரச்சினை- தொலைக்காட்சி பார்ப்பதில் மாமியார் மருமகளிடையே உள்ள கருத்து வேறுபாடு...
எந்தப்பக்கம் சுற்றிப்பார்த்தாலும் பிரச்சினை இதைச்சுற்றித்தான் இருக்கும்..
இருவரின் சண்டையெனும் தீயில் நடுவில் மாட்டிக்கொண்டு கருகுவது கணவன்மார்கள்தான்..அந்தக்காலத்தில் ஸ்டவ் வெடித்து மருமகள்கள் மட்டும் தான் கருகினார்கள்..ஆனால் இப்போ அவங்க ரொம்ப தெளிவாயிட்டாங்க..நம்மள எரியவிட்டுட்டு அவர்கள் குளிர் காய்கிறார்கள்..இதனாலதான் நெறைய ஆம்பளைங்க கருப்பா இருக்காங்க போலப்பா...
இதில் கணவனாகப்பட்டவன் யார்பக்கம் பேசமுடியும்..யாரை விடுவது,யாரை விட்டுக்கொடுப்பது ...முதியோர் இல்லங்கள் தோன்றுவதை நான் சத்தியமாய் நியாயப்படுத்தவில்லை..ஆனால் அவை தோன்ற என்ன காரணம் என்று ஒருதலைப்பட்சமாய் யோசிக்காமால் இருபக்கமும் யோசித்துப்பாருங்கள்..பெற்ற தாயை தெருவில் விடும் அளவுக்கு உலகில் எல்லோருமே மனசாட்சி இல்லாத மனிதர்களா...
இங்கிருந்தால்தான் எப்பொழுதும் பிரச்சினையாய் இருக்கிறது..அவர்கள் அங்காவது நல்லபடியாய் இருக்கட்டும் என்று கூட அந்த தாயின் மகன் நினைத்திருக்கலாம் அல்லவா ...அவனும் என்னதான் செய்வான்..
நீ சொல்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றுதானே கூறுகிறீர்கள்...பெற்றதாய் தந்தையர் முக்கியம்தான்...இந்தியாவைப் பொறுத்தவரை ஒருவனுக்கு ஒருத்திதான்...மனைவி சரியில்லையென்று தினம் ஒரு திருமணம் செய்யமுடியுமா...எனக்கு என் தாய்தந்தையர்தான் முக்கியம்.,நீ தேவையில்லை என்று ஒவ்வொரு கணவன்மாரும் கூறத்தொடங்கிவிட்டால் அப்புறம் இந்தியாவில் ஒருநாளைக்கு ஒருலட்சம் விவாகரத்துக்கள் அரங்கேறும்...
மாமியார்கள் தன் மருமகளை மறு மகளாய்ப் பார்க்கும் காலம் வரும் வரை இப்பிரச்சினை ஓயாது..மருமகள்களும் மாமியாரை மற்றொரு தாயாய் பார்க்கும் வரை இப்பிரச்சினை மாறாது....
ஆயிரம் முதியோர்கள் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள் என்றால் அவர்களின் அத்தனை பிள்ளைகளுமே சுயநலக்காரர்கள்,மனசாட்சியே இல்லாதவர்கள் என்று அர்த்தமல்ல என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து..(ஐயோ சத்தியமா நான் அப்படிலாம் எதுவும் பண்ணலீங்க..என்னை தப்பா நெனைக்காதீங்க..)
இப்பதிவு எழுதத் தொடங்கும்போதே எதிர்மறையான விமர்சனங்கள் வரும் என்று தெரியும்..நான் ஏதாவது தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்...இன்னும் விரிவாக எழுதவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன்..ஆனால் மாமியார்-மருமகள் பிரச்சினைய ஒருநாள்ள பேசிமுடிக்க முடியாதுப்பா...எனக்கு இப்பவே கண்ணக்கட்டுது..ஆளவிடுங்க சாமி...

இது அலசல் அல்ல... குழப்பம்... நன்றி...
ReplyDeleteஅன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html
குட்டையைக் குழப்பிவிட்டிருக்கிறேன். தெளிகிறதா என்று பார்ப்போம்.
Deleteஉங்க வீட்லயும் சீரியல் ஆரம்பிச்சாச்சா...? ஆனாலும் பெரும்பாலானவர்கள் தன் மனைவி பக்கத்தினை மட்டுமே பார்க்கிறார்கள்... அது தவறு! இரவு பகல் கண்விழித்து வளர்த்தவள் தாயல்லவா? தனக்கு ஒரு மரியாதையை எதிர்பார்க்கிறார்கள் பெரியவர்கள்... இவர்கள் சொல்படி நாம் எதற்கு செய்யவேண்டும் என்று தன் விருப்பத்துக்கு நடக்க நினைக்கிறார்கள் இளையவர்கள். இந்த பிரச்சினைக்கு விட்டு கொடுத்து போவதுதான் தீர்ப்பு..! இளையோர்கள் விட்டு கொடுத்து போகலாம். தவறில்லை..! என் வீட்டிலும் என் மாமியார் நிறைய பிரச்சினைகளை ஆரம்பித்தாங்க .. பதிலுக்கு என் மௌனத்தை தான் பரிசாக தந்தேன். அப்படியும் அவர்களை மாற்ற முடியாததால் ஒரு தற்காலிக முடிவு எடுத்தோம்...இரண்டு வருடங்கள் வெளியில் இருப்பது என்று! அப்போது மனங்கள் பக்குவமாகுமென்று..! நாங்கள் வெளியில் சென்ற ஒரு வருடத்திலேயே அவர்களுக்கு பிள்ளை, மருமகள் , குழந்தை என்று கலகலப்பு இல்லாமல் தனிமை அவங்க ஈகோவை உணரச்செய்தது. பிறகு எங்களுடன் பேசி மீண்டும் வீட்டிற்கே அழைத்து வந்து விட்டார்கள்.என் பொறுமைதான் அவர்களை மனம் திருந்த செய்தது. இப்போது நல்ல புரிதல். அன்பு ஒன்று மட்டுமே ஈகோவை உடைக்கும்.
ReplyDeleteஇந்த பிரச்சினையில் கணவர்கள் கண்டு கொள்ளாமல் போவதே சரி! மாமியார் மருமகளை பற்றி சொல்லும் போது, "விடும்மா... நான் இப்பத்தான் வேலைக்கு போய்ட்டு வந்திருக்கேன்... வீட்ல இருக்கிற கொஞ்ச நேரம் உங்களோட சந்தோஷமா இருக்கனும்... பெரிசா எடுத்துக்காத போக போக சரியாயிரும்..." என்று சமாதானம் சொல்ல வேண்டும்.. அதையே மனைவிக்கும்..!
நான் மருமகள்தான்... இருந்தாலும் மாமியார் பக்கமே என் நியாயம்! பாவம் பெரியவர்கள் அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்... நாம்தான் அனுசரித்து போகவேண்டும்.
இதை ஒரு பதிவா எழுதி இருக்கறதிலிருந்தே தெரியுது... நீங்க எவ்வளவு(?) பாதிக்க பட்டிருக்கங்கன்னு.... அன்பால் திருத்த முடியாதது எதுவுமே இல்லை... சகோ அன்பால் மாற்றுங்க! மகிழ்ச்சியா இருங்க! ஆஹா புதுச்சேரி பக்கம் ஒரு கவுன்சிலிங் செண்டர் ஆரம்பிக்கலாம் போலிருக்கே...ஏரியா சொல்லுங்க அங்க செண்டரை ஓப்பன் பண்ணிடறேன்..!
என் மனைவி எவ்வளவுதான் அன்பாகப் பழகினாலும் அம்மா கொஞ்சம்கூட பாசம் காட்டுவதில்லை..இத்தனைக்கும் என் மனைவி என் உறவுதான்
Deleteyappa namakku ellam inum antha anupaavam illa.. already aduthavarukku nadappatha vechu nethutan amma kidda entha visayam pathitan pesikittu irunthen...
ReplyDeletekashttam tan intha problem sikkiram thira vaayppu illa...
nalla 2 side yum nala yosichu eluthi irukkuringa...
thodarungal sir..
நன்றி நண்பா
Deleteஉஷா அன்பரசு madam...
ReplyDeleteninga sonnathu unmai..
ana antha pakkuvam porumai ellam. ellarukkum varuma madam.. pesama athukku oru idea sollunga. avvvvvvvvvv.
unga comment nalla oru vilakkam..
மனிதர்களை மனிதராய் பார்க்கும் மனப்பக்குவம் வரவேண்டும்.உறவுகளாய் பார்ப்பதால்தான் பிரச்சினை
Delete//ஆயிரம் முதியோர்கள் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள் என்றால் அவர்களின் அத்தனை பிள்ளைகளுமே சுயநலக்காரர்கள்,மனசாட்சியே இல்லாதவர்கள் என்று அர்த்தமல்ல// இக்கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.
ReplyDelete//ஆனால் மாமியார்-மருமகள் பிரச்சினைய ஒருநாள்ள பேசிமுடிக்க முடியாதுப்பா...எனக்கு இப்பவே கண்ணக்கட்டுது// ஹாஹா நானும் ஒரு கதை எழுதினேன்..இப்போ நிறைய அனுபவங்கள் கேட்டு பாகம் பாகமாய் பல கதைகள் எழுதலாம் போல...வருத்தமாக இருக்கிறது.
உஷா சொல்வது போல் மாமியார் புரிந்து கொண்டு சற்று இறங்கி வந்தால் நலமே..அவ்வாறு வரவில்லையென்றால்..மருமகள் எத்தனை காலம் பொறுத்துப் போவது? அவளும் மனிதப் பிறவிதானே? என்னை வைத்து நான் எதுவும் எழுதவில்லை, பல பேரிடம் கேட்பதும் பார்ப்பதும் என்னை மிகவும் வருத்துகின்றன..
கல்வியறிவு முழுவதும் பெற்ற சமுதாயம் வந்தபிறகாவது மாறுகிறதா என்று பார்ப்போம்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமையானதோர் அலசல்.
ReplyDeleteஇது வீட்டுக்கு வீடு, மனிதருக்கு மனிதர் வேறுபடும்.
தாங்கள் எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் நம் உஷா டீச்சர் [திருமதி உஷா அன்பரசு] அவர்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
தகுந்த தீர்வு சொல்லுவார்.
அவருக்கு இதிலெல்லாம் அனுபவம் ஜாஸ்தி.
ஆனால் கவுன்சலிங் ஃபீஸ் மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியாகத்தரும்படியாக இருக்கும்.
அவர் நேரிடையாக வாங்க மாட்டார் என்பதால் எனக்கு அனுப்பி வையுங்கள்.
அட்வான்ஸ் வாழ்த்துகள்.
உங்கள் சேவை இந்த நாட்டுக்குத் தேவை.
Deleteகாலத்திற்கேற்ற மாதிரி மாமியார்கள் நடந்துகொள்ள முயலவேண்டும் ...!!
ReplyDeleteபடித்தவர்கள் கூட ஒருசில இடங்களில் பகைமை உணர்வோடும் பழிவாங்கும் உணர்வோடும் இருப்பது பரிதாபத்திற்குரியது அம்மா.தங்கள் வருகைக்கு நன்றி.
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_745.html) சென்று பார்க்கவும்... நன்றி...
இன்றுதான் வலைச்சரம் பற்றி அறிந்துகொண்டேன்..தெரியப்படுத்தியமைக்கு நன்றி ஐயா
Deleteவணக்கம் சகோததரே..
ReplyDeleteவீட்டுக்கு வீடு வாசப்படி.. வாசப்படி அளவு வேண்டுமென்றால் மாறுமே தவிர வாசப்படி கட்டாயம் இருக்கும். அது போல தான் மாமியார் மருமகள் சண்டை. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி. தங்கள் பக்கத்தில் இணைந்து விட்டேன். தொடரும் இனி நம் நட்பு.
வருகைக்கும் நட்புக்கும் நன்றி நண்பா..முதல் பதிவிலேயே நட்பு பாராட்டியமைக்கும்.
Deletesir,
Deletethe hidden fact is monetary support from son if they are having (mothers)more money they will treat daughter in laws as like slave if they don't have monetary support they never live their son for their hole life it is also some kind of passiveness they don't want their sons become as henpecked like their father
thanks for your comments
DeleteAwesome stuff for exams,Study mock tests
ReplyDeletehttp://www.kidsfront.com/competitive-exams.html
வணக்கம் ஐயா!
ReplyDeleteநான், பெற்றோரின் நிலையைப் பற்றி ஒரு blog எழுதியிருக்கிறேன்! அதை நீங்கள், ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
நான் ஒரு எழுத்தாளனும் அல்ல! எழுதுவது எனது பொழுதுபோக்கும் அல்ல! இதன் மூலம், பணமோ புகழோ அடைவது, எனது பிழைப்போ, நோக்கமோ அல்ல! இருப்பினும் நான் எழுதுவது, சமுதாய மாற்றத்திற்க்காக மட்டுமே!
www.lusappani.blogspot.in