Monday, 3 June 2013

என் சந்தேகத்தைக் கொஞ்சம் தீர்த்து வையுங்க...

ஒன்றரை மாத கோடை விடுமுறையில் எங்கும் செல்லவில்லை..மனம் மற்றும் பணப்பிரச்சினைகளால் எங்கும் செல்லாமல்  வீட்டிலேயே முடங்கிக்கிடந்தோம்...நேற்று திடீரென்று எங்காவது சுற்றுலா செல்லலாம் என்று முடிவெடுத்தேன்...இடமாற்றம் ஏற்பட்டால் ஏதாவது உடல் மாற்றம்,மனமாற்றம் ஏற்பட்டு வீட்டில் ஏதாவது நல்ல செய்தி (குழந்தைப்பேறு)  வராதா என்றொரு நப்பாசைதான்..

என்னுடைய நண்பன் புண்ணியமூர்த்தியின் காரில் குடும்ப சமேதமாய் செல்லலாம் என்று முடிவெடுத்த வேளையில்  எங்கு செல்லலாம் என்ற குழப்பம் தொற்றிக்கண்டது...தென்தமிழகம் செல்லலாம் என்றொரு முடிவு..கேரளாவில் உள்ள வயநாடு அல்லது கர்நாடகாவில் உள்ள  கூர்க் மலைக்கு செல்லலாம் என்பது என் நண்பனின் விருப்பம்..எனக்கும் அதுதான் விருப்பம்...

இருந்தாலும்  தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கிவிட்டதால் எனக்குள் சிறுபயம்..இவ்வளவு தூரம் சென்று வீணாகிவிடுமோ என்ற சலனம்...கேரளா ,கர்நாடகாவில் இந்த சீசனில் நல்ல மழை பெய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..தெரிந்தே சென்று மாட்டிக்கொள்ள கொஞ்சம் பயமாய்த்தான் இருக்கிறது...

அதனால்தான் முடிவை உங்கள் கையில் விட்டுவிட்டேன்...கர்நாடகாவில் இருக்கும் நண்பர்கள் யாரேனும் இப்பதிவைப் படித்தால் எனக்கு உதவுங்கள்..இப்போதைக்கு அங்குள்ள காலநிலை ,வந்தால் என்ஜாய் பண்ணமுடியுமா..தயவு செய்து என் குழப்பத்தைத் தீர்த்து வையுங்கள்...

வேறு ஏதேனும் சிறந்த இடம் இருந்தாலும் கூறுங்கள்...நண்பனின் காரில்தான் செல்வதால் ஒன்றும் பிரச்சினையில்லை..இன்று இரவு கூட இடம் முடிவு செய்து உடனே கிளம்பி விடுவோம்...

இதற்கெல்லாம் ஒரு பதிவு அவசியமா என்று திட்டாதீர்கள்.. நிமிடக்கதைபோல நிமிடப்பதிவு என்று வைத்துக்கொள்ளுங்களேன்..இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது நண்பர்களின் பதிவுகளையும் கருத்துக்களையும் படிக்காமல் இருந்தால் என்னவோ மனதிற்கு ஒருமாதிரியாக இருக்கிறது..அந்தளவுக்கு பதிவுலகோடு ஒன்றிவிட்டேன்...

ஒருசில பிரச்சினைகளால் நண்பர்களின் பதிவுகளுக்கும்,கருத்துரைகளுக்கும் பதிலளிக்க முடியவில்லை.. மன்னிக்கவும்..சுற்றுலா சென்றுவந்து புத்துணர்ச்சியோடு  புதிய பதிவோடும் கருத்துக்களோடும் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்..நிலுவையில் இருக்கும் என்னுடைய சுற்றுலா மசோதாவைச் சட்டமாக்க நீங்கள்தான் உங்கள் கருத்துக்கள் மூலம் உதவ வேண்டும்..காத்திருக்கிறேன்...(பின்குறிப்பு..இப்பதிவு இந்த ஒப்புக்கு சப்பாணி பதிவரின் ஐம்பதாவது பதிவு..என்னையும் ஏற்றுக்கொண்ட என் நண்பர்களுக்கு நன்றி..)

18 comments:

 1. கர்நாடகாவில் இருக்கும் நண்பர்களே... தகவல் சொல்லுங்கள்...

  விரைவில் நல்ல செய்திக்கும், ஐம்பதாவது பதிவிற்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. தங்களின் வெற்றிகரமான 50வது பதிவுக்கு என் நல்வாழ்த்துக்ள்.

  ReplyDelete
 3. வாழ்த்துகள்,பயணம் இனிதாய் அமையட்டும்

  ReplyDelete
 4. ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்ள்.

  ReplyDelete

 5. வணக்கம்!

  புதுவைப் புகழ்ஓங்க! பொங்குதமிழ் ஓங்க!
  புதுமைக் கலையோங்கப் போற்றும் - பொதுமை
  மனத்துக் கலிய பெருமாள் வளா்க!
  இனத்துச் சிறப்பை இசைத்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா உங்கள் கருத்துரைக்கு

   Delete
 6. 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
  உல்லாசமாக் சுற்றுலா சென்றுவாருங்கள் நல்லசெய்திவிரைவில் கிடைக்க வாழ்த்துக்கள். இறைவன் அருள்வார்.

  ReplyDelete
 7. வணக்கம் சகோதரரே!

  என் வலைத்தளத்தில் உங்கள் வருகை கண்டேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உங்களுக்கு!

  அட இது உங்கள் ஐம்பதாவது பதிவா?.. ம். நல்லது நல்லது! வாழ்த்துக்கள் சகோ!

  மென்மேலும் மெருகேறி முன்னேறி இனிய பல படைப்புகளைத்தந்திட உளமார வாழ்த்துகிறேன்!

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 8. உங்களுக்கு பதில் சொல்ல ஆசைதான் ஆனா சென்னையில் இல்ல இருக்கேன்.
  ஐம்பதுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்;

  ReplyDelete
 9. enna sir 49 odu nindru vittathu 50 kanom!

  ReplyDelete
 10. ஆசிரியருக்கு வந்த சந்தேகம் நிவர்த்தியானதா ?
  சுற்றுளா சென்று வந்தீர்களா ?
  தென்றலில் தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 11. ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 12. ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete