Monday 29 May 2017

தோற்ற படங்களின் தோற்காத பாடல்கள்

இசைப்பிரியர்களுக்கான அடுத்த பதிவு.தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் கூட சில நேரங்களில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்ததுண்டு..இயக்குனர் பாரதிராஜா, மணிரத்னம் போன்ற ஜாம்பாவான்கள்  கூட மிகப்பெரிய சறுக்கல்களைக் கண்டதுண்டு..இதில் சாதாரண நடிகர்களின் படங்கள் தோற்பது ஒன்று ஆச்சரியம் இல்லை..அப்படி மொக்கை வாங்கிய சில படங்களில் ஒருசில பாடல்கள் மட்டும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததுண்டு..அப்படிப்பட்ட சூப்பர்ஹிட் பாடல்கள் டாப் 10 உங்களுக்காக..

10. மலர்களே மலர்களே
படம்: லவ் பேர்ட்ஸ்

பிரபுதேவா, நக்மா இணைந்த இரண்டாவது படம்..காதலன் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்திற்குப் பிறகு பிரபுதேவா பெரிய மொக்கை வாங்கிய படம்..அதுவும் இயக்குனர் பி.வாசுவின் படம்..ஆனால் பாடலோ சித்ராவின் குரலில் பெரிய ஹிட் ..நீங்களும் கேட்டுப் பாருங்கள்..

9. இளவேனில் இது வைகாசி மாதம்
 படம் : காதல் ரோஜாவே

இயக்குனர் கேயாரின் படம்..விஸ்வரூபம் ஹீரோயின் பூஜா குமார்தான் ஹீரோயின்..இளையராஜாவின் தேனிசையில் எஸ்.பி.பியின் மனம் மயக்கும் பாடல்.

8. இளநெஞ்சே வா
படம்: வண்ணவட்ணப் பூக்கள்

இயக்குனர் பாலுமகேந்திராவின் படம்..பிரசாந்த் காட்டுக்கு சைக்கிள போய்க்கிட்டே பாடுவார்..ஜேசுதாஸ் குரலில் அருமையான பாடல்..படம்தான் பாக்க பொறுமை வேணும்..

7. அடுக்குமல்லி எடுத்துவந்து
படம்:ஆவாரம்பூ

எஸ்.பி.பி ,ஜானகி குரலில் சூப்பர் ரொமாண்டிக் பாட்டு..நம்ம காதல்தேசம் ஹீரோ வினித் நடிச்ச படம்..படத்த பாத்து உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுனா நான் பொறுப்பு இல்ல..

6..சொல்லாயோ சோலைக்கிளி
படம்: அல்லி அர்ஜுனா

நம்ம பாரதிராஜா பையன் மனோஜ் நடிச்ச படம்..இரண்டாம் பாதியாச்சும் பரவால்ல..முதல் பாதி படம் பாத்தாலே மூச்சு போயிடும்..ஆனாலும் சொர்ணலதாவின் சுகமான குரலில் மனம் வருடும் காதல் பாடல்..

5..குயிலுக்குப்பம் குயிலுக்கப்பம்

படம்: என் உயிர்த் தோழன்

இயக்குனர் பாரதிராஜாவின் படம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

பத்து நிமிடத்துக்கு மேல தைரியம் இருந்தா பாருங்க இந்தப் படத்த..ஆனா மலேசியா வாசுதேவன் சித்ராவின் வித்தியாசமான குரலில் சூப்பரான பாடல்

4. வருகிறாய் தொடுகிறாய்
படம்: அஆ

குஷி,வாலி போன்ற மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்த S.J. சூர்யாவின் படம்..ஒழுங்கா அந்த வேலைய மட்டும் பாக்காம உன்ன யார்ரா நடிக்கலனு கேட்டது என்று எல்லோரும் கூறிய படம்..அவன் மூஞ்ச மறந்துட்டு பாட்ட மட்டும் கண்ண மூடிட்டுக் கேட்டுப் பாருங்க ..ஹரிஹரன் சித்ரா செமையா பின்னிருப்பாங்க..

3..துளித்துளியாய்

படம்: பார்வை ஒன்றே போதுமே

குணால் மோனல் நடித்த படம்..படம் ஓடுச்சோ இல்லையோ பாட்டு சூப்பரா ஓடுச்சு..இசையமைப்பாளர் பரணியின் இசையில் சொர்னலதாவின் சுகமான கீதம்..

2.கூடமேல கூடவச்சு.
படம்: ரம்மி

விஜய் சேதுபதிக்கு மொக்கை வாங்கிய படம்..இமான் இசையில் பாட்டு மட்டும் சூப்பர்ஹிட்..வந்தனா சீனிவாசனின் வசீகரக் குரலில் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்..

1. திருடிய இதயத்தை
படம்: பார்வை ஒன்றே போதுமே.

மீண்டும் அந்த படம்..படம் வருடக்கணக்கில் ஓடிக் கேள்விப்பட்டிருப்போம்..ஆனால் வருடக்கணக்கில் ஓடிய பாடல் இந்தப் படத்தின் பாடல்கள்தான்..உன்னி, சித்ரா குரலில் உயிரை மயக்கும் பாடல்..எந்தப் பேருந்தில் ஏறினாலும் இந்தப்பாடல்தான் ஒலிக்கும் அந்தப் படம் வந்த காலகட்டத்தில்..பெரியண்ணா,சுந்தரா டிராவல்ஸ் படத்திற்குப் பிறகு அந்த இசையமைப்பாளர் காணாமலே போய்விட்டார்..ஆனாலும் இந்த ஒரு பாடலால் இன்னும் இசையுலகை ஆளுகிறார்.

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் கலியபெருமாள்..

Sunday 28 May 2017

மருந்து உலகத்தின் மாயைகள்.

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவிவருகிறது..பிராண்டட் மருந்துகளை நாம் அதிகவிலை கொடுத்து வாங்கி ஏமாறுவதாகவும் ஜெனிரிக் மருந்துகள் நமக்கு மிகக்குறைந்த விலையில் வாங்கமுடியும் என்ற செய்திதான் அது..இதில் என்ன கொடுமை என்னவென்றால் ஜெனிரிக் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கூட அதை forward செய்வதுதான்..பல்வேறு குப்பை செய்திகள் தினமும் Whatsapp ல் வருகின்றன. தயவுசெய்து உங்களுக்கு என்னவென்றே தெரியாத செய்திகளை தேவையில்லாமல் பகிராதீர்கள்..

மருத்துவ உலகம் என்பது பல்வேறு மாயைகள் நிறைந்தது..தனி ஒருவன் படத்தில் காட்டுவதுபோல பல்வேறு திருட்டுத்தனங்கள் நிறைந்தது..உலகிலேயே அதிக மருந்து உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது..ஒரு வருடத்திற்கு 3 லட்சம் கோடிக்கும் மேல் வர்த்தகம் நடக்கும் ஒரு மிகப்பெரிய துறை..எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள் இந்தியாவில்தான் 80 சதவீதம் தயாராகின்றன.

மருந்து அட்டைகளில் மருந்துகளில் பெயரின் பக்கத்தில் IP, BP, USP என்று எழுதியிருப்பதைப் பார்த்துள்ளீர்களா?  அது Indian pharmacology,British pharmacology ,United states pharmacology என்ற அந்தந்த நாட்டு காப்புரிமையைக் குறிக்கும்..ஒரு நாடு காப்புரிமை பெற்ற மருந்தைத் தயாரிக்க அந்த நாட்டுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துத்தான் நாம் மருந்தைத் தயாரிக்க முடியும்..அதன் பெயர்தான் பிராண்டட் மருந்துகள்..ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே அந்த பிராண்ட் பெயரில் நாம் தயாரிக்க முடியும்..அதன் பிறகு அந்த மருந்து கம்பெணியால் அதே பெயரில் மருந்து தயாரிக்க முடியாது..ஆனால் அதே மருந்தை வேறு பெயரில் தரம் குறையாமல் தயாரிப்பதே ஜெனிரிக் மருந்து என்று அழைக்கப்படுகிறது..நாங்க எதும் மொள்ளமாரித் தனம்லாம் பன்னல..அதே qualityயோடதான தயாரிச்சுருக்கோம் சொல்வாங்க..அதை food and drug administration என்னும் அமைப்பு OK சொல்லிட்டா போதும்..அவர்கள் ஜெனிரிக் மருந்துகளைத் தயாரிக்கலாம்.
 நீங்கள் இன்டர்நெட்டில் தேடினாலும் ஜெனிரிக் மருந்துகளும் சிறந்தது என்றே காட்டும்..ஆனால் உண்மை அதுதானா என்றால் அங்கேதான் கொஞ்சம் கேள்விக்குறி..ஜெனிரிக் மருந்துகளால் நமக்கு லாபமோ இல்லையோ..மருந்துக்கடை காரர்களுக்கு கொள்ளை லாபம்..ஆம் ,பிராண்டட் மாத்திரை ஒரு அட்டை விற்றால் 5 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றால் அதே மருந்தை ஜெனிரிக் விற்றால் 20 ரூபாய் லாபம் கிடைக்கும்..நம்ம நாட்டு அதிகாரிகள பத்தி தெரியாதா?  பணம் கொடுத்தா எதுல வேணும்னா கையெழுத்து போடுவாங்க..ஒன்றரை வருடம் மெடிக்கல வேல செஞ்சதுக்கே இவ்ளோ தெரிஞ்சு வச்சுருக்கன்..முழுசா தெரியாம ஜெனிரிக் மருந்துகளை நம்பி ஏமாறாதீர்கள்..இன்னும் கேவலமான quality ல தயாரிக்கிற ஒரு மருந்துகள் இருக்கின்றன.அதன் பெயர் commin medicines என்று கூறுகின்றனர்..கணக்கில் வராததை எல்லாம் சேர்த்தால் 5 லட்சம் கோடிக்கும் மேல் வியாபாரம் நடக்கும் சந்தை நம் இந்தியா..எளிமையாக ஏமாறுபவர்களும் நம் இந்தியர்கள்தான்...பிராண்டட், ஜெனிரிக் என்று குழப்பிக்கொள்வதை விட நோய் வராமல் ஜாக்கிரதையா பாத்துக்கோங்க உங்க உடம்ப.. பிராண்டட் மருந்துகளே ஒரு கம்பெணியைவிட வேறொரு கம்பெணியில் குறைந்த விலையில் கிடைக்கின்றன..அதை நம்பி வாங்கி சாப்பிடலாம்...CIMS என்ற புத்தகம் பெரிய புத்தகக் கடைகளில் கிடைக்கும்.அதில் அனைத்து கம்பெனிகளின் மருந்துகளும் விலையுடன் குறிப்பிடப்பட்டிருக்கும்.. நன்றியுடன் உங்கள் கலியபெருமாள்...

Friday 19 May 2017

கால்கடுக்க நிற்பவர்களுக்கு கைகொடுப்போம்

உலகில் பலவிதமான வேலைகள் செய்பவர்களைத் தினந்தோறும் பார்க்கிறோம்..சில வேலைகள் எளிமையாகவும் சிலர் கடினமான வேலைகளைச் செய்துதான் மூன்று வேளை சாப்பிட வேண்டியிருக்கிறது...ரோடுபோடும் பணியாளர்களைப் பார்த்து பலமுறை வருந்தியிருக்கிறேன்..இன்று இப்பதிவில் நீண்டநேரம் நின்றுகொண்டே வேலைசெய்யும் பணியாளர்களையும் அவர்கள் படும் இன்னல்களையும் பற்றியுமே உங்களுடன் பகிர விரும்புகிறேன்..தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள், ஜவுளிக்கடை ஊழியர்கள், சலூன் ஊழியர்கள் போன்றோர் ஒருநாளைக்கு 8 மணி நேரம் நின்றபடியே வேலைசெய்யும் அவலம் இன்னமும் இருக்கிறது..அதனால் அதில் 25 சதவீதம் பேர் VERICOSE VEIN என்னும் நரம்புச் சுருட்டல் நோயினால் பாதிப்புக்குள்ளாகின்றனர்..

அவர்கள் எந்த பாவமும் செய்து இவ்வாறு ஆகவில்லை..நீண்டநேரம் நிற்பதால் ரத்த ஓட்டம் மேலே செல்ல இயலாமல் கால் நரம்புகள் சுருட்டிக் கொள்கின்றன..இதை சாதாரண பிரச்சனையாக நினைக்க வேண்டாம்..வருடத்திற்கு 40 லட்சம் பேர் இப்பிரச்சனையால் பாதிக்கப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன..பத்து வருடமாக கம்பெனியில் நின்றுகொண்டே பணிபுரிவதால் என் அண்ணன் கூட இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்..நான் டிப்ளமோ படித்துவிட்டு ஒருவருடம் மெடிக்கலில் வேலைசெய்த போது எதிரில் இருந்த சலூன்கடை அண்ணன் ஞாயிற்றுக் கிழமைகளில் சாப்பிடக்கூட நேரமின்றி நீண்டநேரம் வேலைசெய்வதைப் பார்க்கும்போதுதான் அவர்கள் படும் கஷ்டத்தை உணரமுடிந்தது..அவர்கள் எளிமையாக சம்பாதிப்பதாக நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்..

அதுக்காக எங்கள என்னடா பன்ன சொல்ற என்று நீங்கள் கேட்பது புரிகிறது..இப்பிரச்சனையை சமூக ஆர்வலர்களிடமும் அரசியல்வாதிகள் பார்வைக்கும் எடுத்துச் செல்லவேண்டும்..தனியார் நிறுவனங்களில் நீண்ட நேரம் நின்றுகொண்டே வேலை செய்வதைத் தடுக்க ஏதேனும் சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். நாளை நாமும் பாதிக்கப்படலாம்..எத்தனையோ அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன..ஏன் நகரும் வகையில் உயரம் மாற்றும் வகையிலான நாற்காலிகள் உருவாக்க முடியாதா? அதிலுள்ள நிறைகுறைகளை விவாதிப்போம்..சலூன்கடை காரர் ஏன் அமர்ந்துகொண்டே முடிவெட்ட முடியாது? அடுத்த ஆண்டு அறிவியல் கண்காட்சியில் இதற்கான தீர்வாக ஏதேனும் காட்சிப்பொருள் உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்..நண்பர்கள் யாரேனும் செய்தாலும் மகிழ்ச்சியே..வாழ்நாள் முழுதும் சிகிச்சை,அறுவைசிகிச்சை மூலம் கூட இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்பதாலேயே இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளேன்.. முடிந்தவரை நண்பர்களுக்கு பகிருங்கள்.நன்றியுடன் உங்கள் கலியபெருமாள்.

Sunday 14 May 2017

அட்டகாசமான அஜித் பாடல்கள்

இசைப்பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு..நம்ம தல அஜித் பிறந்தநாள் பதிவாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன்.ஆனால் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு..அஜித் ரசிகர்களுக்கு இம்மாதம் முழுவதுமே தல பிறந்தநாள்தான்..நான் முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் தீவிர ரசிகனெல்லாம் இல்லை..ஆனால் அஜித் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது வீரம் படத்திற்குப் பிறகுதான்..

இப்பதிவில் அஜித்தின் டாப் 10 பாடல்களை வரிசைப்படுத்தியுள்ளேன்..அஜுத் ரசிகர்கள் பலரே அவரது படத்தில் பாடல்கள் எதுவும் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை என்று நினைக்கின்றனர்..அது ஒரு மாயை..உண்மையில் அஜித் படங்களில் பல சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன..எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் பத்து மட்டும் பட்டியலிட்டுள்ளேன்..

1..தாஜ்மகால் தேவையில்லை,..
படம் : அமராவதி
அஜித்தின் முதல் படம். படம் பெரிய வெற்றி அடையாவிட்டாலும் இன்றளவும் நெஞ்சைவிட்டு நீங்கா பாடல்..SPB, ஜானகி குரலில் மனதை வருடும் அருமையான பாடல்..

2. புத்தம்புது மலரே
படம்: அமராவதி.
 ஒரே படத்தில் இரண்டு பாடல் வேண்டாம் என்று நினைத்தேன்..ஆனால் இந்த பாடல் இல்லாமல் இப்பதிவு நிறைவடையாது..தினம் தினம் கேட்டாலும் மனம் மனம் ரசிக்கும் பாடல் ..

3.நலம் நலம் அறிய ஆவல்
படம்:காதல் கோட்டை
அஜித்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையான படம். இயக்குநர் அகத்தியனுக்கு தேசியவிருதைப் பெற்றுத்தந்த படம்..தேவாவின் இசையில் அனைத்து பாடல்களுமே ஹிட்..ஆனால் இந்தப் பாடல் கொஞ்சம் ஈர்ப்பு அதிகம்..
4. மீனம்மா
 படம்: ஆசை.
அஜித்தின் மற்றுமொரு மாபெரும் வெற்றிப்படம்..சொக்கவைக்கும் சொர்ணலதா ,உன்னி குரலில் கிரங்கடிக்கும் கீதம்.
5. உனைப்பார்த்த பின்புநான்
படம்: காதல் மன்னன்
 அஜித், இயக்குனர் சரண் combo வில் முதல் படம்..பரத்வாஜ் இசையில் நம்ம SPB உயிரக் கொடுத்துப் பாடியிருப்பார்..

6. சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்.
படம்: அமர்க்களம்.
 தல யின் 25 ஆவது படம்.. அஜித் -சரண் இணைந்த இரண்டாவது படம்..SPB மூச்சு விடாமல் பாடிய சாதனை பாடல்..நம்ம தல ஷாலினியை இணைத்த படம்..

 6. சந்தனத் தென்றலை
 படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

அஜித்திற்கு பெரிய வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் ஏ.ஆர் ரகுமான் இசையில் சங்கர் மகாதேவன் பாடிய இந்த பாடலுக்கு தேசிய விருது தேடிவந்தது..
7. சொல்லாமல் தொட்டுச்செல்லும் தென்றல்
படம்: தீனா
 இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் முதல் படம்..ஹரிஹரனின் சிறந்த 10 பாடல்கள் தேர்ந்தெடுத்தால் அதில் நிச்சயம் இப்பாடலும் இடம்பெறும்..தல என்ற பட்டப்பெயரைக் கொடுத்த படம்..

8. அக்கம் பக்கம் யாருமில்லா.
 படம்: கிரீடம்.

படம் வெற்றியடையாவிட்டாலும் பாடல்கள் சூப்பர்ஹிட்டான படம்..ஜி.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கு இந்த ஒரு பாடல் போதும்..இரவில் கேட்டால் இதயம் வருடும்..

9.காற்றில் ஓர் வார்த்தை
 படம்: வரலாறு

 மூன்று தோற்றத்தில் தோன்றி வரலாறு படைத்த படம்..SPB .சாதனா சாகம் குரலில் மனம் வருடும் மற்றுமொரு பாடல்..
10. ஆலுமா டோலுமா.
படம்: வேதாளம்.

 இப்பாடல் பட்டியலில் இடம் பிடிக்க முக்கிய காரணம்..தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் dance show களில் இந்த பாடல் இடம்பெறாமல் சத்தியமாய் இருக்க முடியாது..அனிருத்தின் இசையில் அனைவரையும் ஆடவைத்த பாடல்..படம் வருவதற்கு முன்பே இந்த பாடல் வந்து செக்க போடு போட்டாலும் அஜித்திற்கு இதுபோன்ற பாடல் செட்டாகுமா என்றொரு சந்தேகம் எனக்குள் இருந்தது..ஆனால் படம் பார்த்தபிறகு அஜித்திற்கு மட்டுமே இப்பாடல் செட்டாகும் என்று புரிந்தது..

தூக்கம் வந்துடுச்சு..அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் கலியபெருமாள்..