Thursday 27 April 2017

பெண்ணியம் பேசலமா கொஞ்சம்?

சமீபத்தில் ஆசிரியர்களின் வாசகர் வட்டத்தில் நடைபெற்ற வாசிப்பு முகாமில் பெண்மை என்றொரு கற்பிதம் என்ற புத்தக விமர்சனம் நடந்தேறியது..அதில் அனைவருமே ஆண் சமூகம் முழுக்க குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டனர்..என்னுடைய கருத்துக்களைக் கூறலாம் என்று நினைத்தேன்..ஆனால் என்னைப் பெண்ணியத்திற்கு எதிரானவன் என்று நினைத்து விடுவார்கள் என்றுதான் பேசவில்லை..

எந்தவொரு மாற்றமும் ஒரே நாளில் நிகழ்ந்து விட முடியாது..நிச்சயம் ஒருநாள் சமத்துவ சமுதாயம் உருவாகும்..
அதற்குமுன் அனைத்து ஆண்களையும் ஆணாதிக்கவாதிகளாக பார்க்கும் பெண்களிடம் சில கேள்விகளை முன்வைக்கிறேன்..
1. எத்தனை பெண்கள் உங்கள் கணவரின் சொத்தில் சரிபாதி பங்கை உங்கள் நாத்தனாருக்கு எழுதிக் கொடுக்க முழுமனதுடன் சம்மதிப்பீர்கள்.?.
2.எத்தனை பெண்கள் உங்கள் ஏழு வயது மகனுக்கு கோலம் போட கற்றுக் கொடுத்துள்ளீர்கள்..?
3.எத்தனை பெண்கள் உங்கள் தம்பி வீட்டுக்கு செல்லும்போது உங்கள் நாத்தனாரை உட்கார வைத்துவிட்டு உங்கள் தம்பி வீட்டுவேலை செய்வதை ரசித்துப் பார்த்திருக்கிறீர்கள்.?
4.உங்களில் எத்தனை பேர் உங்கள் மாமியாருக்கு தீபாவளிக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு புடவை எடுத்துக் கொடுத்துள்ளீர்கள்.?
5.எத்தனை பெண்கள் உங்கள் மகனுக்கு குணத்தில் மட்டும் அழகான பெண்ணை மணம் முடிக்க தயாராய் இருக்கிறீர்கள்?
6..இன்னும் பல கேள்விகள் மனதினுள்ளே...மொபைலில் அதிகம் எழுதமுடியவில்லை..நான் பெண்ணியத்திற்கு எதிரானவன் அல்ல..ஆண்கள் மட்டும் அவ்வாறு வளர்க்கப்படவில்லை..பெண்களும் இந்த சமூகத்தில் அவ்வாறுதான் வளர்க்கப்பட்டுள்ளனர்..
ஆண்களை எதிரிகளாக பார்ப்பதை விட்டுவிட்டு அடுத்த தலைமுறை குழந்தைகளை சரிசமமாக வளர்க்க முயல்வோம்..முடிந்தால் சமையல் கற்றுக் கொடுக்கத் தொடங்குங்கள் உங்கள் ஆண் குழந்தைக்கு..நிச்சயம் எதிர்மறை விமர்சனங்கள் வரும் என்ற எதிர்பார்ப்புகளோடு உங்கள் கலியபெருமாள்..

Thursday 13 April 2017

இந்திய மாநிலங்களின் பெயர்கள் கற்பித்தல்-சிறுமுயற்சி

பதிவுலகம் பக்கம் தலைகாட்டி பலமாதங்கள் ஆகிவிட்டன..கழுத்துவலி மற்றும் பணிச்சுமையால் எழுதமுடிவதில்லை..என் வகுப்பறை அனுபவத்தைப் பகிரவே இப்பதிவு..இந்திய மாநிலங்களின் பெயர்களைக் கற்பிக்க முயன்றேன் இரண்டு வாரங்களுக்கு முன்..நமக்குத் தெரியும் என்பதால் மாணவர்களும் இரண்டு நாட்களில் கற்றுக்கொள்வார்கள் என்று நினைத்து ஏமாந்து போனேன்..மாநிலங்களில் பெயர்களை உச்சரிக்கவே மிகவும் சிரமப்பட்டனர்..என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் எனக்குத் தெரிந்த ஒரேவித்தை பாடலைத் தேர்ந்தெடுத்தேன்..அதில் வெற்றியும் அடைந்துவிட்டேன்..இப்பொழுது இந்திய வரைபடத்தில் எந்த மாநிலத்தின் பெயரைக் கூறினாலும் சரியாகக் காட்டிவிடுகின்றனர் நொடிப்பொழுதில்..உங்கள் ஆசிரிய நண்பர்களுக்குப் பகிருங்கள்..என்னுடைய இந்த சிறுமுயற்சி யாருக்கேனும் பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சி..மாநிலங்களின் தலைநகரோடு பாடலாகக் கூற முயற்சிக்கிறேன் விரைவில். நன்றிகளுடன் உங்கள் கலியபெருமாள்...https://youtu.be/bN6YKe4arec