Sunday, 28 May 2017

மருந்து உலகத்தின் மாயைகள்.

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவிவருகிறது..பிராண்டட் மருந்துகளை நாம் அதிகவிலை கொடுத்து வாங்கி ஏமாறுவதாகவும் ஜெனிரிக் மருந்துகள் நமக்கு மிகக்குறைந்த விலையில் வாங்கமுடியும் என்ற செய்திதான் அது..இதில் என்ன கொடுமை என்னவென்றால் ஜெனிரிக் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கூட அதை forward செய்வதுதான்..பல்வேறு குப்பை செய்திகள் தினமும் Whatsapp ல் வருகின்றன. தயவுசெய்து உங்களுக்கு என்னவென்றே தெரியாத செய்திகளை தேவையில்லாமல் பகிராதீர்கள்..

மருத்துவ உலகம் என்பது பல்வேறு மாயைகள் நிறைந்தது..தனி ஒருவன் படத்தில் காட்டுவதுபோல பல்வேறு திருட்டுத்தனங்கள் நிறைந்தது..உலகிலேயே அதிக மருந்து உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது..ஒரு வருடத்திற்கு 3 லட்சம் கோடிக்கும் மேல் வர்த்தகம் நடக்கும் ஒரு மிகப்பெரிய துறை..எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள் இந்தியாவில்தான் 80 சதவீதம் தயாராகின்றன.

மருந்து அட்டைகளில் மருந்துகளில் பெயரின் பக்கத்தில் IP, BP, USP என்று எழுதியிருப்பதைப் பார்த்துள்ளீர்களா?  அது Indian pharmacology,British pharmacology ,United states pharmacology என்ற அந்தந்த நாட்டு காப்புரிமையைக் குறிக்கும்..ஒரு நாடு காப்புரிமை பெற்ற மருந்தைத் தயாரிக்க அந்த நாட்டுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துத்தான் நாம் மருந்தைத் தயாரிக்க முடியும்..அதன் பெயர்தான் பிராண்டட் மருந்துகள்..ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே அந்த பிராண்ட் பெயரில் நாம் தயாரிக்க முடியும்..அதன் பிறகு அந்த மருந்து கம்பெணியால் அதே பெயரில் மருந்து தயாரிக்க முடியாது..ஆனால் அதே மருந்தை வேறு பெயரில் தரம் குறையாமல் தயாரிப்பதே ஜெனிரிக் மருந்து என்று அழைக்கப்படுகிறது..நாங்க எதும் மொள்ளமாரித் தனம்லாம் பன்னல..அதே qualityயோடதான தயாரிச்சுருக்கோம் சொல்வாங்க..அதை food and drug administration என்னும் அமைப்பு OK சொல்லிட்டா போதும்..அவர்கள் ஜெனிரிக் மருந்துகளைத் தயாரிக்கலாம்.
 நீங்கள் இன்டர்நெட்டில் தேடினாலும் ஜெனிரிக் மருந்துகளும் சிறந்தது என்றே காட்டும்..ஆனால் உண்மை அதுதானா என்றால் அங்கேதான் கொஞ்சம் கேள்விக்குறி..ஜெனிரிக் மருந்துகளால் நமக்கு லாபமோ இல்லையோ..மருந்துக்கடை காரர்களுக்கு கொள்ளை லாபம்..ஆம் ,பிராண்டட் மாத்திரை ஒரு அட்டை விற்றால் 5 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றால் அதே மருந்தை ஜெனிரிக் விற்றால் 20 ரூபாய் லாபம் கிடைக்கும்..நம்ம நாட்டு அதிகாரிகள பத்தி தெரியாதா?  பணம் கொடுத்தா எதுல வேணும்னா கையெழுத்து போடுவாங்க..ஒன்றரை வருடம் மெடிக்கல வேல செஞ்சதுக்கே இவ்ளோ தெரிஞ்சு வச்சுருக்கன்..முழுசா தெரியாம ஜெனிரிக் மருந்துகளை நம்பி ஏமாறாதீர்கள்..இன்னும் கேவலமான quality ல தயாரிக்கிற ஒரு மருந்துகள் இருக்கின்றன.அதன் பெயர் commin medicines என்று கூறுகின்றனர்..கணக்கில் வராததை எல்லாம் சேர்த்தால் 5 லட்சம் கோடிக்கும் மேல் வியாபாரம் நடக்கும் சந்தை நம் இந்தியா..எளிமையாக ஏமாறுபவர்களும் நம் இந்தியர்கள்தான்...பிராண்டட், ஜெனிரிக் என்று குழப்பிக்கொள்வதை விட நோய் வராமல் ஜாக்கிரதையா பாத்துக்கோங்க உங்க உடம்ப.. பிராண்டட் மருந்துகளே ஒரு கம்பெணியைவிட வேறொரு கம்பெணியில் குறைந்த விலையில் கிடைக்கின்றன..அதை நம்பி வாங்கி சாப்பிடலாம்...CIMS என்ற புத்தகம் பெரிய புத்தகக் கடைகளில் கிடைக்கும்.அதில் அனைத்து கம்பெனிகளின் மருந்துகளும் விலையுடன் குறிப்பிடப்பட்டிருக்கும்.. நன்றியுடன் உங்கள் கலியபெருமாள்...

6 comments:

 1. பயனளிக்கும் தகவல்கள்! நன்றி!!

  ReplyDelete
 2. எது தான் உண்மை, இதுக்காக நாங்க என்னா research ஆ பன்ன முடியும். அரசியல்வாவாதிகள் வாழ்க

  ReplyDelete
 3. 100 ரூபாய் மாத்திரை வேறு கம்பெனியில் 10 ரூபாய்தான் என்றால் நம்பி வாங்க வேண்டாம்

  ReplyDelete
 4. சூழ்நிலையில் generic மருந்துகளை வாங்கித்தான் ஆகவேண்டும் என்ற நிலை வந்தவர்களுக்கு எப்படி இதனை புரிய வைப்பது கலி.....

  ReplyDelete
  Replies
  1. மருத்துவர்கள் யாரும் ஜெனிரிக் மருந்துகளை எழுதுவதில்லை நண்பா..மக்களை ஏமாற்றி ஜெனிரிக் மருந்துகளை விற்கவே இது போன்ற போலி விளம்பரங்கள் நண்பா..பொதுமக்கள் யாருக்கும் எது ஜெனிரிக் எது பிராண்டட் என்று பார்த்து தெரிந்துகொள்ள முடியாது.மருத்துவரைத்தான் நம்பியாகவேண்டும்

   Delete
 5. சே... என்னவொரு அநியாயம்...

  ReplyDelete