Monday, 7 October 2013

இரத்தம் கொடுக்கப் போன கதை...

பதிவுலகம் பக்கம் தலைகாட்டி ரொம்ப நாளாச்சு..நீங்க எல்லாம் என்ன மறந்து இருப்பீங்கனு நெனைக்குறன்..(அப்புடியே போய்த் தொலைய வேண்டியதுதானேடா..உன்ன யாரு ரீஎன்ட்ரிலாம் கொடுக்கச் சொன்னது...இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதாளமாய் உங்கள் முன் மீண்டும் வருவதில் மகிழ்ச்சி)...

இணைய இணைப்பு இல்லாததாலும் பள்ளிப் பணிகளில் மூழ்கிவிட்டதாலும் பதிவுகள் எழுதமுடியவில்லை..எங்க ஊர்ல இப்பதான் காலாண்டு விடுமுறை..என் இம்சையை இந்த ஒருவாரம் பொறுத்துக்கோங்க...

கொஞ்ச நாட்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்..விடுமுறை நாளொன்றில் பள்ளியில் என்னுடன் பணிபுரியும் நண்பன் மோகனிடமிருந்து காலையிலயே செல்பேசியில் அழைப்பு வந்தது..சற்று பதற்றத்துடன் பேசினான்...தன்னுடைய நண்பனின் மனைவிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதாகவும் உடனடியாக B NEGATIVE இரத்தம் வேண்டும் என்றும் கூறினான்...என்னுடைய இரத்தம் அதே வகைதான் நானே தருகிறேன் என்று கூறினேன்...

உடனே நான் கனவுலகில் மிதக்க ஆரம்பித்துவிட்டேன்...தேர் கொடுத்தவன் ,போர்வை கொடுத்தவன் எல்லாம் வள்ளல் எனும்போது நான் என் உடம்பின் இரத்தத்தையே தானமாகத் தரப்போகிறேன்..அப்படியென்றால் நானும் வள்ளல்தானே...நாளைக்கு நம்ப பேர்லாம் பேப்பர்ல வரும்...பாடப்புத்தகத்துல்லாம் நம்மளப்பத்தியும் எழுதுவாங்கனு ஓவரா பில்டப்லாம் பண்ணிக்கிட்டு கிளம்பினேன்...

அங்க ஒருத்தங்க உயிருக்கு போராடிட்டு இருக்காங்க..நீ என்னானா சல்லிப்பயலாட்டம் கனவு கண்டுட்டு இருக்கியானு திட்டாதீங்க..பொதுநலத்துலயும் கொஞ்சம் சுயநலம் இருக்கத்தானே செய்யுது...

எங்கள் ஊரிலிருந்து கிட்டத்தட்ட 45 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் புதுச்சேரியின் ஒரு புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்திருந்தார்கள்...நானும் உடனடியாக கிளம்பினேன்...

உடனே என் மனைவி வந்து போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்று பாடத்தொடங்கிவிட்டாள்...யாரென்றே தெரியாதவர்களுக்கு நாம் ஏன் ரத்தம் கொடுக்க வேண்டும்,நீ என்ன மாமனா மச்சானா என்று வீரபாண்டிய கட்டபொம்மன் வசனமெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டாள்...

நம்ம ஊரு பொண்ணுங்க நாடகத்த பாத்துட்டு நாலுமணி நேரம் அழுவாங்க..ஓவர் செண்டிமென்ட்லாம் பேசுவாங்க...ஆனா அடுத்தவங்களுக்கு உதவி செய்யனுனா மட்டும் சுயநலமா மாறிடுவாங்க...ஊர்ல எத்தன பேரு இருக்காங்க அவங்களாம் செய்யட்டும்..நாம் ஏன் செய்யவேண்டும் என்பார்கள்..(தாய்க்குலம்லாம் உடனே சண்டைக்கு வந்துடாதீங்க...நான் எல்லா பெண்களையும் சொல்லவில்லை...)

ஒருவழியாக என் மனைவியை சமாதானப்படுத்திவிட்டுப் புறப்பட்டேன்..நண்பனின் பைக்கில் வேகமாகச் சென்றோம்..ஒருமணி நேரத்தில் மருத்துவமனையை அடைந்துவிட்டோம்...என் நண்பன் மோகனின் நண்பர் அழுதுகொண்டிருந்தார்...அவரை ஏதோ சமாதானம் செய்துவிட்டு இரத்தம் கொடுக்கப் புறப்பட்டேன்...

இரத்தம் கொடுக்கும் இடத்தில் ஒரு இளம்பெண் இருந்தார்...நீங்க இதுக்கு முன்னாடி இரத்தம் கொடுதததுண்டா,ஏதாவது வியாதி இருக்கிறதா,ரொம்ப நாளா ஏதாச்சும் மாத்திரை சாப்டுண்டு இருக்கேளா போன்ற கேள்விகளைக் கேட்டார்..எல்லாவற்றுக்கும் ஹரிசாண்டலாய் தலையாட்டினேன்...

உண்மையிலேயே உங்கள் இரத்தம் b negative தானா என்று கேட்டார் அந்தப்பெண்...உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை என்றேன்..ஏதாவது எய்ட்ஸ் இருந்து தொலைக்கப்போகுதுனு இரத்தம் செக் பண்ணாங்க...அந்தப் பெண் திரும்பி வந்து கூறியபதில் என்னை அதர்ச்சிக்குள்ளாக்கியது...

ஏங்க உங்க இரத்தம் பி நெகடிவ்வே இல்ல ..பி பாஸிட்டிவ்...பெருசா வந்துட்டார் கர்ணமகாராஜா மாதிரி என்று அந்தப்பெண் நினைத்ததை என்னால் யூகிக்க முடிந்தது...எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..இல்லைங்க நான் ஏற்கனவே இரத்தப் பரிசோதனை செய்திருக்கிறேன்,எனக்கு நன்றாகத் தெரியும் என்றேன்..அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை...அங்கிருந்த வேறொரு ஆளிடம் என்னுடைய இரத்த மாதிரியைக்காண்பித்தார்...அவரும் பார்த்துவிட்டு  ஆமாம் பி பாஸிட்டிவ்தான் என்று கூறிவிட்டார்...கூச்சத்தால் என் முகம் நாணியது...(பேப்பர்ல பேர் வராம போயிடுச்சு அத விடுங்க)..என் நண்பனின் நண்பர் என்னைப்பற்றி என்ன நினைப்பாரோ...(கைகொட்டிச் சிரிப்பார்கள் ஊரார் கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று பேக்ரவுண்டில் பாட்டெல்லாம் ஓடத்துவங்கியது..)எப்படியோ இரத்தவங்கியில் இருந்த இரத்தத்தைக்கொண்டே நண்பரின் மனைவியைக் காப்பாற்றிவிட்டார்கள்..

போனமச்சான் திரும்பிவந்தான் என்ற கதையாய் வெட்கத்தோடு திரும்பிவந்தேன்...வீட்டிற்கு வந்து நடந்ததை என் மனைவியிடம் கூறினேன்..அவளுக்கோ உள்ளூற மகிழ்ச்சி எப்படியோ நம் கணவருக்கு இரத்தம் எடுக்கவில்லை என்று...அடுத்து நான் செய்த முதல்வேலை ஒரு லேப் க்கு சென்று என்னுடைய இரத்தத்தைப் பரிசோதனை செய்தேன்..

அங்கே மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது....கன்ஃபார்மா உங்க இரத்தம்  B NEGATIVE தான் என்றார்கள்....அந்தப்பொண்ணு ஏம்பா அப்புடிச் சொல்லுச்சு..நான் எதுக்குப்பா சரிப்பட்டு வரமாட்டன்......

18 comments:

 1. இப்போ என்ன தான் உங்க ரத்தத்தின் குரூப்...? அடிக்கடி மாறுமோ...? ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. என் குரூப் மாறல..அவிங்க மாத்திட்டாங்க..

   Delete
 2. பொதுவாக இப்படி ரத்தம் கேட்கும் போது வகைகளை பார்க்க மாட்டார்கள். உங்கள் ரத்தத்தை ரத்த வங்கியில் சேமித்து கொண்டு நோயாளிக்கு தேவையான குரூப்பை இரத்த வங்கியிலிருந்தே ஏற்றி விடுவார்கள்.
  உதவுனும்னு நினைச்சிங்களே அதுவே பாராட்ட விஷயம் ... !

  ReplyDelete
 3. //பதிவுலகம் பக்கம் தலைகாட்டி ரொம்ப நாளாச்சு..நீங்க எல்லாம் என்ன மறந்து இருப்பீங்கனு நெனைக்குறன்.// அப்படில்லாம் யாரும் மறக்க மாட்டாங்க. பதிவுலகத்தில என்ன சிறப்புன்னா ஒவ்வொரு ஊரும் ஞாபகத்துக்கு வரும் போது அந்த ஊர்ல இருக்கிற பதிவெழுதறவங்கதான் ஞாபகத்துக்கு வருவாங்க... இப்ப உதாரணத்துக்கு வேலூர்னு எடுத்துகிட்டா ....... சே.. என்னைய நானே பாராட்டிக்கிறதெல்லாம் புடிக்காதுப்பா... விடுங்க புதுச்சேரின்னா எல்லாருக்கும் உங்க ஞாபகம் வரும் சகோ!

  ReplyDelete
  Replies
  1. என்னையும் அப்படித்தான் மறுநாள் அல்லது கூப்பிடும்போது வந்து கொடுக்கச் சொன்னார்கள்.

   Delete
 4. ஜோக்குன்னு சொன்னாலும் கடவுளே நீங்க போற காரியம் உருப்படியா நடக்கணுமேன்னு நான் நினைச்சுட்டு இருந்தேன்..:)

  ஆனா பாருங்க அங்கே போனதும் உங்க இரத்த குரூப்பே மாறிடிச்சு..
  ஏதொ கொடுக்க பிராப்தம் உங்களுக்கு இல்லைபோலும்.. இல்லைன்னா ரொம்ப தொத்தலும் வத்தலுமா இருக்குற உங்களைப் பார்த்து பாவம் பய வேணாம்னு நினைச்சுட்டாங்களோ..:))

  மீள்வருகைக்கு மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 5. என்னைப் பாத்தா உங்களுக்கு வத்தலும் தொத்தலுமா தெரியுதா?

  ReplyDelete
 6. ஒரே உடம்பு ரத்தம் என்றாலும் ஊர் மாறினா ரத்தகுரூப் மாறிடுமோ

  ReplyDelete
  Replies
  1. என் ரத்தம் இரண்டுக்கு மூன்று முறை சோதித்து விட்டேன்..B negative தான்..போன இடத்தில்தான் ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது.

   Delete
 7. hi sir. ninda nal piraku unga varukai happy.. adikkadi unga pakkam vanthu paarpen oru new post irukkathu..
  inga porattam thiviramaka iruppathal net use panna mudiyurathu illa.. ( nal mulukka power cut)
  athutan late comment:-)
  sari post ku varuvom..

  உடனே என் மனைவி வந்து போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்று பாடத்தொடங்கிவிட்டாள்...யாரென்றே தெரியாதவர்களுக்கு நாம் ஏன் ரத்தம் கொடுக்க வேண்டும்,நீ என்ன மாமனா மச்சானா என்று வீரபாண்டிய கட்டபொம்மன் வசனமெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டாள்...///

  ippadi tan namathu nattula mukka vasi penkal irukkuranga sir...
  so unga wife appadi sonnathula thappu illa, ungaloda kadamai avungalukku methuva eduththu solli vilakkanum..

  நம்ம ஊரு பொண்ணுங்க நாடகத்த பாத்துட்டு நாலுமணி நேரம் அழுவாங்க..ஓவர் செண்டிமென்ட்லாம் பேசுவாங்க...ஆனா அடுத்தவங்களுக்கு உதவி செய்யனுனா மட்டும் சுயநலமா மாறிடுவாங்க...ஊர்ல எத்தன பேரு இருக்காங்க அவங்களாம் செய்யட்டும்..நாம் ஏன் செய்யவேண்டும் என்பார்கள்..///

  kaalam marikitte varuthu...
  illaththu arasiikalukkullum changes varanum..


  already na oru post eluthanum irunthen. blood donait um muda nampikaikalumnu..
  antha post elutharatha maranthitten. unga post niyapakam paduthiduchu elutha..
  virivil eluthuren..

  nandri sir. thodarungal thodarkiren.

  ReplyDelete
  Replies
  1. விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பா..உன்னுடைய பூர்விகமே திருப்பதி தானா...தமிழ்தான் தாழ்மொழியா?.மாநிலங்களை இரண்டாகப் பிரிப்பதெல்லாம் அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக செய்யும் சூழ்ச்சி என்பதை மக்கள் என்று உணர்வார்களோ தெரியவில்லை..

   Delete
 8. உஷா அன்பரசு7 October 2013 17:50
  //பதிவுலகம் பக்கம் தலைகாட்டி ரொம்ப நாளாச்சு..நீங்க எல்லாம் என்ன மறந்து இருப்பீங்கனு நெனைக்குறன்.// அப்படில்லாம் யாரும் மறக்க மாட்டாங்க. பதிவுலகத்தில என்ன சிறப்புன்னா ஒவ்வொரு ஊரும் ஞாபகத்துக்கு வரும் போது அந்த ஊர்ல இருக்கிற பதிவெழுதறவங்கதான் ஞாபகத்துக்கு வருவாங்க... இப்ப உதாரணத்துக்கு வேலூர்னு எடுத்துகிட்டா ....... சே.. என்னைய நானே பாராட்டிக்கிறதெல்லாம் புடிக்காதுப்பா... விடுங்க புதுச்சேரின்னா எல்லாருக்கும் உங்க ஞாபகம் வரும் சகோ!/////


  sariya soninga...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்பிற்கும் அடிக்கடி வந்து என் பக்கத்தையும் பார்ப்பதற்கு நன்றி நண்பா.

   Delete
 9. கலியபெருமாள் புதுச்சேரி9 October 2013 09:37
  விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பா..உன்னுடைய பூர்விகமே திருப்பதி தானா...தமிழ்தான் தாழ்மொழியா?.மாநிலங்களை இரண்டாகப் பிரிப்பதெல்லாம் அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக செய்யும் சூழ்ச்சி என்பதை மக்கள் என்று உணர்வார்களோ தெரியவில்லை..///

  makkal unarnthuviddal piraku enna avungaloda pilappu odathula sir..

  ennoda pathivukala ungalukka answer kidaikkum...

  1. விழியின் ஓவியம்: பெண் பதிவர் வைத்த ஆப்பும், பதிவுலகத்தின் ஷாக்கும்

  http://www.sudarvizhi.com/2013/01/blog-post_11.html

  2. விழியின் ஓவியம்: பேபி இந்திராவும், ஒரு வரலாற்று செய்தியும்!

  http://www.sudarvizhi.com/2013/04/blog-post_5.html

  3. விழியின் ஓவியம்: மாடர்ன் பாட்டியும், சிலிண்டர் படும் பாடும்!

  http://www.sudarvizhi.com/2013/04/blog-post_6.html

  4. விழியின் ஓவியம்: சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியும் அங்கு படித்த அனுபவமும்!

  http://www.sudarvizhi.com/2013/04/blog-post_10.html

  ama ithu ellam padichutan na therinjukkanuma ninga keddukkalam... avvvvvvv


  summa ellam oru vilamparam tana sir... intha blog mulam tana ellam santhichukkurom.

  so antha blog laiye vidaiy irukkumpothu en link kodukka koduthathunu yosichu link koduthen.


  ellam padikka mudiliyinalam. 1 and 4 padiyunga enna pathi therinjukkalam...
  ana inaiya ulakam rompa danger sir.. oruthar oda elutha mattum vechu oruthavungala nama idai poda kudathu..
  ennavo oru thaththuvam sollanumnu thonichu solitten..
  sikkiram ungaloda pathivu ethirparkkiren..

  ReplyDelete
 10. இரத்தம் எடுத்துட்டு கையில ஒரு கிலோ ஆப்பிள் பாக்கெட் எல்லாம் தரமாட்டாங்களா ?

  ReplyDelete
  Replies
  1. ஆப்பிள் தரமாட்டாங்க..ஒரு ஃப்ரூடி ஜூஸும் ஒரு பிஸ்கோத்தும் கொடுப்பாங்க பாஸ்

   Delete
 11. http://www.kidsfront.com/competitive-exams.html
  Try this .online tutorial classes which are free are waiting for you.
  Test papers,sample papers and much more.

  ReplyDelete