இசைப்பிரியர்களுக்கான அடுத்த பதிவு.தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் கூட சில நேரங்களில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்ததுண்டு..இயக்குனர் பாரதிராஜா, மணிரத்னம் போன்ற ஜாம்பாவான்கள் கூட மிகப்பெரிய சறுக்கல்களைக் கண்டதுண்டு..இதில் சாதாரண நடிகர்களின் படங்கள் தோற்பது ஒன்று ஆச்சரியம் இல்லை..அப்படி மொக்கை வாங்கிய சில படங்களில் ஒருசில பாடல்கள் மட்டும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததுண்டு..அப்படிப்பட்ட சூப்பர்ஹிட் பாடல்கள் டாப் 10 உங்களுக்காக..
10. மலர்களே மலர்களே
படம்: லவ் பேர்ட்ஸ்
பிரபுதேவா, நக்மா இணைந்த இரண்டாவது படம்..காதலன் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்திற்குப் பிறகு பிரபுதேவா பெரிய மொக்கை வாங்கிய படம்..அதுவும் இயக்குனர் பி.வாசுவின் படம்..ஆனால் பாடலோ சித்ராவின் குரலில் பெரிய ஹிட் ..நீங்களும் கேட்டுப் பாருங்கள்..
9. இளவேனில் இது வைகாசி மாதம்
படம் : காதல் ரோஜாவே
இயக்குனர் கேயாரின் படம்..விஸ்வரூபம் ஹீரோயின் பூஜா குமார்தான் ஹீரோயின்..இளையராஜாவின் தேனிசையில் எஸ்.பி.பியின் மனம் மயக்கும் பாடல்.
8. இளநெஞ்சே வா
படம்: வண்ணவட்ணப் பூக்கள்
இயக்குனர் பாலுமகேந்திராவின் படம்..பிரசாந்த் காட்டுக்கு சைக்கிள போய்க்கிட்டே பாடுவார்..ஜேசுதாஸ் குரலில் அருமையான பாடல்..படம்தான் பாக்க பொறுமை வேணும்..
7. அடுக்குமல்லி எடுத்துவந்து
படம்:ஆவாரம்பூ
எஸ்.பி.பி ,ஜானகி குரலில் சூப்பர் ரொமாண்டிக் பாட்டு..நம்ம காதல்தேசம் ஹீரோ வினித் நடிச்ச படம்..படத்த பாத்து உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுனா நான் பொறுப்பு இல்ல..
6..சொல்லாயோ சோலைக்கிளி
படம்: அல்லி அர்ஜுனா
நம்ம பாரதிராஜா பையன் மனோஜ் நடிச்ச படம்..இரண்டாம் பாதியாச்சும் பரவால்ல..முதல் பாதி படம் பாத்தாலே மூச்சு போயிடும்..ஆனாலும் சொர்ணலதாவின் சுகமான குரலில் மனம் வருடும் காதல் பாடல்..
5..குயிலுக்குப்பம் குயிலுக்கப்பம்
படம்: என் உயிர்த் தோழன்
இயக்குனர் பாரதிராஜாவின் படம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.
பத்து நிமிடத்துக்கு மேல தைரியம் இருந்தா பாருங்க இந்தப் படத்த..ஆனா மலேசியா வாசுதேவன் சித்ராவின் வித்தியாசமான குரலில் சூப்பரான பாடல்
4. வருகிறாய் தொடுகிறாய்
படம்: அஆ
குஷி,வாலி போன்ற மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்த S.J. சூர்யாவின் படம்..ஒழுங்கா அந்த வேலைய மட்டும் பாக்காம உன்ன யார்ரா நடிக்கலனு கேட்டது என்று எல்லோரும் கூறிய படம்..அவன் மூஞ்ச மறந்துட்டு பாட்ட மட்டும் கண்ண மூடிட்டுக் கேட்டுப் பாருங்க ..ஹரிஹரன் சித்ரா செமையா பின்னிருப்பாங்க..
3..துளித்துளியாய்
படம்: பார்வை ஒன்றே போதுமே
குணால் மோனல் நடித்த படம்..படம் ஓடுச்சோ இல்லையோ பாட்டு சூப்பரா ஓடுச்சு..இசையமைப்பாளர் பரணியின் இசையில் சொர்னலதாவின் சுகமான கீதம்..
2.கூடமேல கூடவச்சு.
படம்: ரம்மி
விஜய் சேதுபதிக்கு மொக்கை வாங்கிய படம்..இமான் இசையில் பாட்டு மட்டும் சூப்பர்ஹிட்..வந்தனா சீனிவாசனின் வசீகரக் குரலில் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்..
1. திருடிய இதயத்தை
படம்: பார்வை ஒன்றே போதுமே.
மீண்டும் அந்த படம்..படம் வருடக்கணக்கில் ஓடிக் கேள்விப்பட்டிருப்போம்..ஆனால் வருடக்கணக்கில் ஓடிய பாடல் இந்தப் படத்தின் பாடல்கள்தான்..உன்னி, சித்ரா குரலில் உயிரை மயக்கும் பாடல்..எந்தப் பேருந்தில் ஏறினாலும் இந்தப்பாடல்தான் ஒலிக்கும் அந்தப் படம் வந்த காலகட்டத்தில்..பெரியண்ணா,சுந்தரா டிராவல்ஸ் படத்திற்குப் பிறகு அந்த இசையமைப்பாளர் காணாமலே போய்விட்டார்..ஆனாலும் இந்த ஒரு பாடலால் இன்னும் இசையுலகை ஆளுகிறார்.
அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் கலியபெருமாள்..

வருடுகிறாய் பாடல் எப்படி கேட்டாலும் பிடிப்பதில்லை.. எஸ்.ஜே. சூர்யாவால்.... மத்ததுலாம் எப்பயும் நான் விரும்பி கேட்கும் பாடல்
ReplyDeleteநன்றி தோழி
Deleteஎஸ்.ஏ.சூரியா இனியும்கூட கொஞ்சம் ஆலோசிக்கட்டும் - கில்லர்ஜி
ReplyDelete