Sunday 14 April 2013

தமிழ்ப்புத்தாண்டு வேண்டாமே!...புத்தாண்டு என்போம்..!!.

       அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..காலையிலிருந்து பார்க்கும் முகங்களும், கேட்கும் குரல்களும் சொல்லும் ஒரே வார்த்தை இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்பதுதான்..கேட்பதற்கு மனதிற்குக் கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது..

இதிலென்ன கஷ்டம்,நல்ல விஷயம்தானே என்று கேட்கிறீர்களா  ..ஆங்கிலப் புத்தாண்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமும்,ஆரவாரமும் நம் புத்தாண்டன்று இல்லாமல் போவது ஏன் என்ற நெருடல்தான்...

நம்மவர்களுக்கு எப்போதுமே அயல்நாட்டுக்காரன் மொழியான ஆங்கிலத்தின் மீதுதானே அதீத பாசம். ஆங்கிலப் புத்தாண்டன்று யாருமே  HAPPY ENGLISH NEW YEAR என்று கூறுவதில்லை.ஆனால் நம் தாய்த்தமிழின் புத்தாண்டை என்னமோ வேறு மொழி போல தமிழ்ப் புத்தாண்டு என்று அழுத்தம் கொடுத்துச் சொல்லும் அளவுக்கு தமிழ் தரம் தாழ்ந்துவிட்டதா தமிழர்களே..?

தமிழர்களே இனியும் தயக்கம் வேண்டாம் ..இயன்றவரை தமிழில் எழுதுங்கள்.. தமிழைக் கொண்டாடுவோம்..தமிழனின் புத்தாண்டை தமிழ்க்கலாச்சாரத்தோடு கொண்டாடுங்கள்..

இன்னுமொரு சிறு விளக்கம்..வாழ்த்துகள் என்பது சரியா அல்லது வாழ்த்துக்கள் என்பது சரியா என்பதில் நம்மில் பலருக்கும் பல காலமாக சந்தேகம்..யாரோ ஒருவர் அவருடைய புத்தகத்தில் எழுதிவிட்டார் என்பதற்காக அதை அப்படியே பயன்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை.. உண்மையில் வாழ்த்துக்கள் என்பதே சரியான வார்த்தை..

கண்ணபிரான் என்னும் நண்பரின் பதிவைப் படிக்கும்போதுதான் மேற்கண்ட விளக்கங்களை அறிந்துகொண்டேன்..எழுத்துக்கள், வாழ்த்துக்கள் என்பதே சரியென்று தொல்காப்பியர், நச்சினார்க்கினியார் ஆகியோரின் உரையோடு தெளிவாக விளக்கியிருந்தார்..இந்த தருணத்தில் அவருக்கு என்னுடைய நன்றியையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்..

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..அடுத்த பதிவில் தொடர்கிறேன்..



3 comments:

  1. கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

    ReplyDelete