Saturday, 20 April 2013

பாண்டிச்சேரிக்காரன் என்று சொல்லிக்கொள்ள ஒன்னும் பெருமையாக இல்லை...

 நம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை இருக்கும்...திண்டுக்கல் பூட்டு,மதுரை மல்லி,ஊத்துக்குளி வெண்ணெய்,மணப்பாறை முறுக்கு, கும்பகோணம் வெத்தலை,விருதுநகர் பரோட்டா,பத்தமடை பாய், வளையப்பட்டி தவில்,திருநெல்வேலி அல்வா,பழனி பஞ்சாமிர்தம்...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..எங்க ஊர் பாண்டிச்சேரியோட பெருமை எதுவென்று உங்களுக்கு எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்..

புதுச்சேரி மக்களுக்குக் கிடைத்திருக்கும் கௌரவம் பார்த்தீர்களா  ..எங்கள் ஊருக்கு வரும் உறவினர்கள் எங்களிடம் எதிர்பார்ப்பதும் கூட அதைத்தான்..  உங்கள் ஊருக்கு எவ்வளவு தூரத்திலிருந்து   வந்திருக்கிறோம் சரக்கு வாங்கிக்கொடுத்தால்தானே மரியாதையாக இருக்கும் ...வாங்கித்தரவில்லையென்றால் அவர்களை அவமதித்ததாக வேறு சொல்வார்கள்..

என்னப்பா உங்கள் ஊரைப்பற்றி நீயே இவ்ளோ கேவலமாக சொல்கிறாயே, என்னதான் இருந்தாலும் நாம  பொறந்த ஊர பத்தி தப்பா பேசலாமா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது..என்ன செய்வது நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..

நாம் சாதாரணமாக  வெளியூருக்கு எதற்கெல்லாம் செல்வோம்..வேலை தேடி செல்வோம்,படிப்பைத்தேடி செல்வோம்,உறவைத்தேடி செல்வோம்..ஆனால் பாண்டிச்சேரிக்கு வருபவர்களின் புள்ளிவிவரங்களைக் கணக்கெடுத்தால் பாரைத்தேடி வருபவர்கள்தான் அதிகம்...நாங்க எப்படிலாம் சுற்றலாத்துறைய மேம்படுத்தறோம் பாத்துக்கங்க...சகுனி படத்துல கார்த்தி சொல்ற மாதிரி மார்க்கெட்டிங் பாஸ் மார்க்கெட்டிங்...

புதுச்சேரியில் குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறதோ இல்லையோ, 'குடி'மகன்களுக்கு நிச்சயம் பாதுகாப்பு வழங்கப்படும்..'குடி'மகன்கள் நம்பிக்கையோடு வரலாம்..'பாரு'க்குள்ளே நல்ல நாடு எங்கள் பாண்டிச்சேரி நாடு..

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பார்கள்.. ஆனால் எங்கள் பாண்டிச்சேரியின் பொன்மொழி பாரில்லா ஊருக்கு முழுதும் பாழ் என்பதே...புதுச்சேரி மாநிலத்தின் மேற்கு எல்லையில் உள்ளது எங்கள் மடுகரை கிராமம்..நான் பிறந்தது,வளர்ந்தது,படித்தது எல்லாமே எங்கள் ஊரில்தான்..நான் படித்த தொடக்கப்பள்ளியில்தான் இப்போது ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்..சிறுவயதில் எனக்கு மிகவும் பிடிக்கும்  எங்கள் ஊரை.

ஆனால் தற்போது எங்கள் ஊர் ஒரு தீவாக மாறிவருகிறது.. ஆமாம் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட பகுதியை அப்படித்தானே சொல்வார்கள்..என்றைக்கு வேண்டுமானாலும் கடலில் மூழ்கிப்போகலாம்..இந்த தீவிலிருந்து தப்பித்துச்செல்ல ஒரு படகைத் தேடிக்கொண்டிருக்கிறேன்..

பொருளாதாரத்திலும் போக்குவரத்து நெரிசலிலும் வேண்டுமானால் எங்கள் மாநிலம் உயர்ந்து விளங்கலாம்..ஆனால் அன்பு,கருணை, மனிதநேயம்,சகிப்புத்தன்மை இவற்றிலெல்லாம் நாங்கள் ஏழைகள்தான்.. ஒரேஒரு ஆறுதல் என்னவென்றால் இங்கே குடிக்க வருபவர்களைப்போலவே படிக்க வருபவர்களும் அதிகம்..என்ன செய்யறது இப்படிதான் மனச தேத்திக்கனும்..மறுபடியும் சொல்கிறேன் பாண்டிச்சேரிக்காரன் என்று சொல்லிக்கொள்ள ஒன்னும் பெருமையாக இல்லை..(மேற்கண்ட அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட கருத்து..யார் மனதையேனும் புண்படுத்தும் விதத்தில் இருந்தால் மன்னிக்கவும்)..அடுத்த பதிவில் தொடர்கிறேன்..நன்றி.

7 comments:

 1. oru murai unga urukku suthiparkka vanthu irukken.
  innoru murai central university la oru vicayama vanthu irukken. enakku rompa pidichu irunthichu unga uru..

  sarakku visayathhtula illa..

  ReplyDelete
  Replies
  1. நீ எந்த ஊர் நண்பா? பார்ப்பதற்கும் பகட்டுக்கும் மட்டுமே எங்கள் ஊர் அழகு..

   Delete
 2. ##ஊர் tirupati..
  www.sudarvizhi.com
  l eluthum mahesh nan

  ReplyDelete
 3. 'பாரு'க்குள்ளே நல்ல நாடு எங்கள் பாண்டிச்சேரி நாடு...

  தன ஊரின் குறை சொல்வதற்கும் ஒரு மனசு வேண்டும்...

  ReplyDelete
 4. ஸ்ரீ அரவிந்தர், அன்னை ஆசிரமம் உங்கள் ஊரில்தானே உள்ளது? எல்லா ஊர்லயும் எதாவது ஒரு குறை இருக்கும்... கெட்ட சரக்கை விட்டுட்டு நல்ல சரக்கை முன் வச்சி பெருமையா பார்க்கலாமே!

  ReplyDelete
  Replies
  1. பாண்டிச்சேரி மீது எனக்கு எந்த தனிப்பட்ட கோபமும் கிடையாது தோழி..மேலைநாட்டினரும் குடிக்கிறார்கள் பொழுதுபோக்கிற்காக..ஆனால் இந்தியாவில் பலருக்கு அதுதான் முழுநேர வேலையே..மதுவால் அழியும் குடும்பங்கள்தான் எத்தனை எத்தனை இந்தியாவில்.அந்த ஆதங்கத்தில்தான் அவ்வாறு எழுதினேன் தோழி.வருகைக்கு நன்றி..

   Delete