Saturday 13 April 2013

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று என்னிடம் கேட்டால் என் பதில் இல்லையென்றுதான் சொல்வேன். கடவுள் முன் அனைவரும் சமம் என்று கூறிவிட்டு கோயில்களில் 100ரூபாய் தரிசனம், விஐபி தரிசனம் என்று வியாபரமாக்கியபிறகு எங்கே இருக்கிறார் கடவுள் ?.

ஆனால் தமிழர்களின் கலாச்சாரத்தையும், புராதாண கோயில்களையும் மதிப்பவன் நான்..வாசலில் சாணமிடுவது, கோமியம் தெளிப்பது ,மஞ்சள் தெளித்தல்,முகத்தில் மஞ்சள் பூசுவது, தாலிக்கயிறு அணிவது போன்ற அறிவியல் பூர்வமான அற்புத தமிழ் கலாச்சாரங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன..

தாலிக்கயிறெல்லாம் இப்பொழுது தங்கச்சரடுகளாக தரம் உயர்ந்துவிட்டன..மஞ்சள் இருந்த  இடமெல்லாம் இப்பொழுது ஃபேர் அண்டு லவ்லிகள் நிரப்பிவருகின்றன.. இன்றைய மாடர்ன் பெண்கள் சாணத்தைப்பார்த்தாலே சாக்கடையைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள்.கௌரவக்குறைச்சலாக நினைக்கிறார்கள்..கோயில்களுக்குப் போவதைக் குற்றமாக நினைக்கிறார்கள்...

 நல்லதைச் செய்யக்கூட நம் மக்களை பயமுறுத்த வேண்டியிருக்கிறது..கடவுள் இருக்கிறார் என்ற பயம் இருந்த்ததால்தான் அக்காலத்தில் குற்றங்கள் குறைவாக நடந்தன..ஆனால் இன்று கலாச்சாரமும் காணோம், கடவுளையும் காணோம்...இன்று கோவில்களுக்குச் செல்லும் ஒருசிலர் கூட வெட்டிக்கதை பேசவும், பெண்களை ரசிக்கவும் மட்டுமே செல்கிறார்கள் என்பது உண்மைதானே..

சூரிய ஒளியில் விட்டமின் டி இருப்பதை ஒத்துக்கொள்கிறீர்களா  ?அப்படியென்றால் முழுநிலவின் ஒளியில் ஏன் விட்டமின் சி இருக்கக்கூடாது?.,செவ்வாய் கோளின் ஒளியில் கூட விட்டமின் ஏ இருக்கலாம் அல்லவா?  .புதன் கோளில் கூட புத்திர பாக்கியம் தரக்கூடிய விட்டமின் ஈ இருக்கக்கூடும்...

சில ஆண்டுகளுக்கு முன்னர் அயல்நாட்டு அறிவியல் அறிஞர்கள் செவ்வாய் கோள் சிவப்புக்கோள்  என்று கஷ்டப்பட்டு கண்டறிந்ததை ,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழர்கள் செவ்வாய் என்று பெயரிட்டது அறிவியல் ஆச்சர்யம் அல்லவா?  ..தீமிதிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக அறிஞர்கள் இன்று கண்டறிந்திருப்பதை, நம் தமிழர்கள் காலங்காலமாய் பின்பற்றி வருகிறோம்.

அமெரிக்கா காரன் சொன்னால்தானே  நாம் எதையும் கேட்போம்,ஆர்யபட்டா சொன்னதை நாம் என்று கேட்டிருக்கிறோம்.

கடவுள் இருக்கிறார் என்று நான் விவாதம் செய்யமாட்டேன்..ஆனால் கடவுள் என்ற பெயரும் ,காவல்துறை என்ற பெயரும் இல்லாமல் போயிருந்தால் நம்மவர்கள் எல்லாரும் எப்போதோ கொலை,கொள்ளை,கற்பழிப்பில் ஈடுபடத் தொடங்கியிருப்பார்கள்..

அமெரிக்காவில் ஒருவன் செல்பேசியில் பேசுவதை ஆந்திராவில் இருக்கும் ஒருவன் எந்த குரல்மாற்றமும் இன்றி அப்படியே கேட்க முடிகிறதென்றால் மனிதனின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோவொரு சக்தி இருப்பதாகத்தானே அர்த்தம்..அந்த அற்புத சக்தியை.நான் கடவுளாக ஏற்றுக்கொள்கிறேன்...

கோவை மாவட்ட சுற்று வட்டாரங்களில் இன்றும் பல வீடுகளில் தாலிக்கயிறு அணிந்திருப்பதையும்,வீடுகளில் சாணம் தெளிப்பதையும் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்..

தமிழர்களே கடவுளை வணங்குகிறீர்களோ இல்லையோ,தமிழ் கலாச்சாரத்தை மதியுங்கள்..நம் தமிழ் கலாச்சாரம் அறிவியல் பூர்வமான அற்புதமான கலாச்சாரம்..அடுத்த பதிவில் தொடர்கிறேன்..நன்றி..

5 comments:

  1. நல்லது... நன்றி...

    சிறிய அலசல் : http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post.html

    ReplyDelete
  2. அமெரிக்காவில் ஒருவன் செல்பேசியில் பேசுவதை ஆந்திராவில் இருக்கும் ஒருவன் எந்த குரல்மாற்றமும் இன்றி அப்படியே கேட்க முடிகிறதென்றால் மனிதனின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோவொரு சக்தி இருப்பதாகத்தானே அர்த்தம்..அந்த அற்புத சக்தியை.நான் கடவுளாக ஏற்றுக்கொள்கிறேன்...///


    கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று என்னிடம் கேட்டால் என் பதில் இல்லையென்றுதான் சொல்வேன்////


    புரியல
    கடவுல் இருக்கார் சொல்லுரீகலா இலைனு சொல்லவரீங்கலா



    ---

    செல்பேசியில் பேசுவதை இங்கு கேட்கிரோம் எல்லாம் அரிவியலின் கண்டு பிடிப்புதானே
    அது எப்படி கடவுல் சக்தி ஆகும்.


    ---
    நமக்கு புலப்படாத ஒரு சக்தி இருக்கு... அதுதான் கடவுள்... அவ்வளவு தான்...


    ---
    http://www.sudarvizhi.com/2013/03/blog-post_4750.html

    ---
    சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  3. சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  4. நல்ல பதிவு . நன்றி

    ReplyDelete
  5. அருமையான பதிவு !!!!!!

    ReplyDelete