Thursday 11 April 2013

சிறுவர் உலகம்-வலைப்பதிவு அறிமுகம்

பிளாக்கர் பக்கம் வந்து ஒருவார காலமாகிவிட்டது. வேலைப்பளு காரணமாக இரண்டு மூன்று  நாட்களாக எழுதமுடியவில்லை. இன்று வலைப்பதிவில் கண்ட ஒரு சிறந்த வலைப்பூவைப்பற்றி இப்பதிவில் எழுத விரும்புகிறேன்.

siruvarulakam.blogspot.com என்ற வலைப்பூவே அது. சிறுவர்களுக்குத் தேவையான நூற்றுக்கணக்காண நீதிக்கதைகள் இப்பதிவில் விரவிக்கிடக்கின்றன.நம் சிறுவயதில் படிக்கும் காலத்தில் பள்ளிகளில் நீதிபோதனை என்ற பாடவேளை இருக்கும். செய்யுள் பகுதி நடத்தும்போது கூட ஆசிரியர்கள் ஒருசில நீதிக்கதைகளை கூறியே பாடம் நடத்துவார்கள்.

ஆனால் தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்குக் கதைகூறும் பழக்கமே மறைந்துபோய்விட்டது.அதனால்தான் இன்றைய சமுதாயத்தில் மனிதாபிமானம்,சகிப்புத்தன்மை,அன்பு,கருணை,பெரியோரை மதித்தல் ஆகிய குணங்கள் அற்றுப்போய்விட்டது.

அன்பார்ந்த ஆசிரியர்களே,பெற்றோர்களே மேற்குறிப்பிட்ட தளத்தைப் பயன்படுத்திப் பாருங்கள். தினந்தோறும் ஒரு நீதிக்கதையை உங்கள் குழந்தைகளுக்குக் கூறுங்கள். வருங்கால சமுதாயம் வன்முறையற்ற சமுதாயமாக மாறட்டும்.

காஞ்சனா ராதாகிருஷ்ணன் என்பவரே மேற்கண்ட தளத்தின் ஆசிரியர். சமுதாயத்துக்குத் தற்போது தேவையான விஷயத்தைப் பதிவிட்டு வரும் அவருக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்....அடுத்த பதிவில் தொடர்கிறேன்.நன்றி

6 comments:

  1. அருமையான தளம்... அறிமுகம் செய்தமைக்கு நன்றி... புதிய பதிவர்களுக்கு மிகவும் உதவும்... நான் முன்பிருந்தே தொடரும் சிறப்பான தளம்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே.

      Delete
  2. நல்லதோரு வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. நன்றி kaliaperumal Kali.

    Reply

    ReplyDelete