நீ எப்படா LIC ஏஜன்டா ஆனன்னு கேக்கறீங்களா...அப்படிலாம் ஒன்னுமில்லீங்க..ஏதோ நமக்கு தெரிஞ்ச விஷயத்த நாலு பேருக்கு சொல்லுவோமே..அதுக்குத்தான் இந்த பதிவு..
LIC பயனுள்ளதா ,பயனற்றதா என்பது அவரவரின் தனிப்பட்ட கருத்து..தினக்கூலி வேலைசெய்யும் கூலித்தொழிலாளி சேமிக்கும் ஒரு 500 ரூபாய் தன் மகளின் திருமணத்திற்கு உதவும் 50000 ரூபாய் LIC பாலிசி உண்மையில் உயர்ந்ததே..
எல்.ஐ.சி பாலிசி போட்டு வைத்திருப்பவர்கள் பாலிசி பத்திரங்களை முதலில் ஒரு xerox copy போட்டு வீட்டில் வைத்துக்கொள்ளவும்..எப்பொழுதாவது தொலைந்துவிட்டால் வேறு duplicate bond பெற உங்கள் பாலிசி எண் அவசியம்..அப்பொழுது xerox copy உதவும்..சில நேரங்களில் தீவிபத்து போன்ற அசம்பாவிதங்கள் நேர்ந்தால் பாலிசி பாதிப்படையலாம்.அதனால் உங்கள் மொபைலில் ஒரு போட்டோ எடுத்துக்கூட சேமித்து வைத்துக்கொள்ளலாம்..
பாலிசி தொலைந்துவிட்டால் வேறு பாலிசி பெறுவது எப்படி ?...
LIC அலுவலகத்தில் தெரிவித்தால் ஒரு விண்ணப்பம் கொடுப்பார்கள்..அதைப்பூர்த்தி செய்யவேண்டும்..பிறகு பத்திரப்பதிவு அலுவலகம் சென்று LIC of INDIA ,PUDUCHERRY என்ற பெயரில் 100 ரூபாய் பத்திரம் ஒன்று வாங்கவேண்டும்..அதில் அருகிலுள்ள நோட்டரி பப்ளிக்கிடம் சென்று விவரம்,பாலிசி எண் கூறினால் அவர் அந்த பத்திரத்தை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு தருவார்..அவ்வளவுதான் வேலை முடிந்தது..அதைக் கொண்டுபோய் எல்.ஐ.சி அலுவலகத்தில் கொடுத்தால் உங்கள் முகவரிக்கு புதிய duplicate பாலிசி வந்துவிடும்..
எல்.ஐ.சி பாலிசியின் எளிய கடன் வசதி..
உங்கள் எல்.ஐ.சி பாலிசி மூலம் மிகக்குறைந்த வட்டியான 9% ல் குறைந்த அளவில் அவசரத்தேவைக்கு கடன் பெற முடியும்..நீங்கள் 1000 ரூபாய் பாலிசி பத்து வருடங்களுக்கு மேல் கட்டினால் குறைந்தது 50000 ரூபாய்க்கு மேல் கடன்பெற முடியும்..அதுவும் மூன்றை நாளில் நேரடியாக உங்கள் வங்கிக்கணக்கில்..எல்.ஐ.சி அலுவலகத்தில் கடன் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து உங்கள் ஏஜன்டிடம் அதில் கையொப்பம் பெற்று கொடுத்தால் போதும்..விண்ணப்பத்தில் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை எழுதிவிட்டால் போதும்.,இரண்டே நாளில் உங்கள் வங்கிக்கணக்கில் கடன்தொகை வந்துவிடும்..வெறும் முக்கால் பைசா வட்டியில் வங்கிகள் கூட கொடுப்பதில்லை..
ஏதோ எனக்குத் தெரிந்த சில தகவல்கள்..யாருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சி...அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் கலியபெருமாள்...

பயனுள்ள விஷயம் விளக்கத்துடன் பகிர்ந்ததற்கு நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தோழி
Deleteநல்ல தகவல்கள் நண்பரே...
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteஅருமை கலி... எளிய விஷயம் தானே என்று இருக்காமல் ஒரு நினைவூட்டலுக்கு மிக்க மகிழ்ச்சி பா
ReplyDeleteநான் என்னுடைய எல்.ஐ.சி பாலிசியை ஒருமுறை தொலைத்துவிட்டேன்..அதில் கிடைத்த அனுபவம் யாருக்கேனும் உதவுமே என்றுதான் பகிர்ந்தான் நண்பா..
Deleteநன்று
ReplyDeleteநன்றி தோழர்...
ReplyDeletethanks bro
ReplyDelete