Friday 19 May 2017

கால்கடுக்க நிற்பவர்களுக்கு கைகொடுப்போம்

உலகில் பலவிதமான வேலைகள் செய்பவர்களைத் தினந்தோறும் பார்க்கிறோம்..சில வேலைகள் எளிமையாகவும் சிலர் கடினமான வேலைகளைச் செய்துதான் மூன்று வேளை சாப்பிட வேண்டியிருக்கிறது...ரோடுபோடும் பணியாளர்களைப் பார்த்து பலமுறை வருந்தியிருக்கிறேன்..இன்று இப்பதிவில் நீண்டநேரம் நின்றுகொண்டே வேலைசெய்யும் பணியாளர்களையும் அவர்கள் படும் இன்னல்களையும் பற்றியுமே உங்களுடன் பகிர விரும்புகிறேன்..தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள், ஜவுளிக்கடை ஊழியர்கள், சலூன் ஊழியர்கள் போன்றோர் ஒருநாளைக்கு 8 மணி நேரம் நின்றபடியே வேலைசெய்யும் அவலம் இன்னமும் இருக்கிறது..அதனால் அதில் 25 சதவீதம் பேர் VERICOSE VEIN என்னும் நரம்புச் சுருட்டல் நோயினால் பாதிப்புக்குள்ளாகின்றனர்..

அவர்கள் எந்த பாவமும் செய்து இவ்வாறு ஆகவில்லை..நீண்டநேரம் நிற்பதால் ரத்த ஓட்டம் மேலே செல்ல இயலாமல் கால் நரம்புகள் சுருட்டிக் கொள்கின்றன..இதை சாதாரண பிரச்சனையாக நினைக்க வேண்டாம்..வருடத்திற்கு 40 லட்சம் பேர் இப்பிரச்சனையால் பாதிக்கப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன..பத்து வருடமாக கம்பெனியில் நின்றுகொண்டே பணிபுரிவதால் என் அண்ணன் கூட இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்..நான் டிப்ளமோ படித்துவிட்டு ஒருவருடம் மெடிக்கலில் வேலைசெய்த போது எதிரில் இருந்த சலூன்கடை அண்ணன் ஞாயிற்றுக் கிழமைகளில் சாப்பிடக்கூட நேரமின்றி நீண்டநேரம் வேலைசெய்வதைப் பார்க்கும்போதுதான் அவர்கள் படும் கஷ்டத்தை உணரமுடிந்தது..அவர்கள் எளிமையாக சம்பாதிப்பதாக நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்..

அதுக்காக எங்கள என்னடா பன்ன சொல்ற என்று நீங்கள் கேட்பது புரிகிறது..இப்பிரச்சனையை சமூக ஆர்வலர்களிடமும் அரசியல்வாதிகள் பார்வைக்கும் எடுத்துச் செல்லவேண்டும்..தனியார் நிறுவனங்களில் நீண்ட நேரம் நின்றுகொண்டே வேலை செய்வதைத் தடுக்க ஏதேனும் சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். நாளை நாமும் பாதிக்கப்படலாம்..எத்தனையோ அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன..ஏன் நகரும் வகையில் உயரம் மாற்றும் வகையிலான நாற்காலிகள் உருவாக்க முடியாதா? அதிலுள்ள நிறைகுறைகளை விவாதிப்போம்..சலூன்கடை காரர் ஏன் அமர்ந்துகொண்டே முடிவெட்ட முடியாது? அடுத்த ஆண்டு அறிவியல் கண்காட்சியில் இதற்கான தீர்வாக ஏதேனும் காட்சிப்பொருள் உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்..நண்பர்கள் யாரேனும் செய்தாலும் மகிழ்ச்சியே..வாழ்நாள் முழுதும் சிகிச்சை,அறுவைசிகிச்சை மூலம் கூட இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்பதாலேயே இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளேன்.. முடிந்தவரை நண்பர்களுக்கு பகிருங்கள்.நன்றியுடன் உங்கள் கலியபெருமாள்.

2 comments:

  1. ஐயோ...! என்ன கொடுமை சார் இது...?

    ReplyDelete
    Replies
    1. தமிழ்நாட்டிலேயே லட்சக்கணக்கான பேருக்கு இப்பிரச்சினை உள்ளது நண்பரே..பலரும் அசிங்கப்பட்டுக்கொண்டு காட்டிக்கொள்வதில்லை..ஆடை மறைத்துக்கொள்வதால் நமக்கும் தெரிவதில்லை.

      Delete