Saturday 26 October 2013

தீபாவளியோடு சேர்த்து எங்கள் பள்ளிக்கும் தீப ஒளி ஏற்றுங்கள்...

நான் சிறுவயதில் படித்த பள்ளியிலேயே ஆசிரியராக பணிபுரிவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்...என்னை ஒரு ஆசிரியராக்கிய பள்ளிக்கு நான் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் மனதை அரித்துக்கொண்டிருக்கிறது...என் மாணவனுக்கு நான் என்ன செய்தேன் என்று என்னை நானே அடிக்கடி கேட்டுக்கொள்வேன்..புதுச்சேரி மாநிலத்தில் ஒரு சிறந்த பள்ளியாக மாறிக்கொண்டிருக்கிறது எங்கள் பள்ளி...மாணவர்களின் நலனையும் பள்ளியின் வளர்ச்சியையும் பற்றியுமே சிந்திக்கும் சிறப்பான பத்து ஆசிரியர்களைக் கொண்ட பள்ளி...தனியார் பள்ளிகளுக்கு இணையாக எங்கள் பள்ளியையும் முன்னேற்ற வேண்டும் என்று முயற்சித்து வருகிறோம்..இந்தியாவின் சிறந்த ஆயிரம் பள்ளிகளில் ஒரு பள்ளியாக எங்கள் பள்ளியின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது...தேசிய அளவிலான ஓவியப்போட்டியில் பங்கேற்று எங்கள் பள்ளி மாணவர்கள் மூன்று முறை டெல்லி சென்று வந்திருக்கிறார்கள்...புதுவை மாநிலத்திலேயே தேசிய அளவிலான ஓவியப்போட்டிக்கு இதுவரை வேறு எந்த அரசுப்பள்ளியும் தேர்வு பெற்றதில்லை என்பதைப் பெருமையாகக் கூறிக்கொள்கிறேன்..அழகான மூலிகைத்தட்டம் ஒன்றை வைத்து சிறப்பாக பராமரிக்கிறோம்...அரசு பள்ளி என்றாலே 30 முதல் 40 மாணவர்கள்தான் படிப்பார்கள் என்ற நிலையில்லாமல் எங்கள் பள்ளியில் 320 மாணவர்கள் படித்து வருகின்றனர்..புதுச்சேரியிலேயே அதிக மாணவர்களைக்கொண்ட அரசு தொடக்கப்பள்ளிகளில் எங்கள் பள்ளியும் ஒன்று...எங்கள் பள்ளியின் வளர்ச்சிகளை மேலும் அதிகரிக்கவும் கணினிக்கல்வியை மேம்படுத்தவும் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தவும் உங்களால் இயன்ற நிதி உதவியை வழங்குமாறு கேட்டுகொள்கிறேன்..எங்கள் பள்ளியின் அவ்வப்போதைய வளர்ச்சியை gpsmadukarai.blogspot.com என்ற வலைப்பூவில் அறிந்துகொள்ளுங்கள்..சினிமா பார்ப்பதற்கும்,ஓட்டலில் சென்று பந்தாவாக சாப்பிடுவதற்கும் எவ்வளவோ பணத்தை வீணாக்குகிறோம்..அதில் ஒரு சிறுபகுதியை  எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினால் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு செருப்பு வாங்கவும் நோட்டு புத்தகம் வாங்கவும் உதவும்...ஆயிரக்கணக்கில் செலவுசெய்து பட்டாசுவாங்கி வளிமண்டலத்தை கரிமண்டலமாக்கிக் கொண்டிருக்கும் கணவான்களே !!!
அதில் ஒரு பட்டாசுசரம் வாங்கும் பணத்தை ஒரு ஏழைமாணவனுக்குக் கொடுத்தால் கிழிந்த ஆடைக்குப் பதிலாக ஒரு நல்ல சீருடை வாங்கித்தர முடியும்...ஒரு ஏழை மாணவனின் வாழ்வில் ஒளியேற்றிய பெருமை உங்களையும் சாரும்...சென்ற ஆண்டும் இதேபோல் ஒருசில நண்பர்களிடம்  உதவிகேட்டிருந்தேன்..என்னுடைய வங்கிக்கணக்கிற்கு பணம் போடுமாறு கேட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதைப் பின்புதான் அறிந்துகொண்டேன்..என்னுடைய பெயருக்குப் பணம் அனுப்பினால் அப்பணம் தவறான முறையில்கூட பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது...ஆகவே உங்களால் முடிந்த சிறு உதவியானாலும் பரவாயில்லை..(.சிறுதுரும்பும் பல்குத்த உதவும்..).  GOVT PRIMARY SCHOOL,MADUKARAI,PUDUCHERRY-605105 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு நட்புடன் வேண்டுகிறேன்...புதுச்சேரியின் ஒரு முன்மாதிரிப் பள்ளியாக எங்கள் பள்ளியும் ஒருநாள் மாறும் என்ற கனவுகளோடு .......உங்கள் கலியபெருமாள்...

5 comments:

  1. நல்ல கனவு..! தினமலர் சிறுகதை போட்டியில் பரிசு பெற்றுள்ள " பிரம்மாக்கள்" என்ற என் சிறுகதையும் ஒரு நல்ல ஆசிரியரின் கனவுகளும், முயற்சியை பற்றியதுதான்..! அச்சிறுகதை பத்திரிக்கையில் பிரசுரமான பிறகு (இரு மாதங்கள் கழித்து) பதிவில் வெளிவரும். நல்ல வழிகாட்டுதலாக இருக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்..!

    ReplyDelete
  2. உங்களின் முயற்சி வெற்றி பெறவும், சேவை எண்ணத்திற்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. உங்கள் முயற்சி உண்மையிலேயே மிக மிகச் சிறப்பானது..

    கண்டிப்பாக முடிந்த உதவியை வழங்க மனம் துடிக்கிறது...
    ஏதும் வழி உண்டாவென யோசிக்கின்றேன் சகோ!

    உங்கள் சேவை எண்ணத்திற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இப்பதிவை எழுதத் தொடங்கும்போதே மனச்சலனத்தோடு எழுதலாமா வேண்டாமா என்றுதான் எழுதத்தொடங்கினேன்..மதிய உணவுத் திட்டத்திற்காக பிச்சை எடுத்துகூட தருகிறேன் என்றாரே காமராசர் அவரை நினைத்துப் பார்த்தேன்,மாணவர்களின் நலனுக்காகப் பிறரிடம் கையேந்துவதில் தவறில்லை என்று எழுதத் தொடங்கிவிட்டேன்.போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்

      Delete
  4. All the students who are giving boards this year.You guys mnust try the online
    test series available at http://www.kidsfront.com/academics/class.html
    Best ever site for it.

    ReplyDelete