Sunday, 31 March 2013

சேதாரம் என்னும் வேதாளம்

அனைவருக்கும் வணக்கம். நேற்று கடலூரில் உள்ள பிரபல நகைக்கடைக்குச் சென்றிருந்தேன். மனைவிக்கு ஒரு செயின் எடுப்பதற்காக மனைவியுடன் சென்றிருந்தேன்.ஒரு  பத்து நிமிடத்தில் மாடல் செலக்ட் செய்து விலை பற்றி விசாரிக்கலானேன். ஏதேதோ கணக்கெல்லாம் போட்டு விற்பனைப்பெண் ஒரு பவுன் செயினின் விலை ரூபாய் 25800 என்று கணக்கு போட்டு சொன்னார். சிறிது நேரம் பேரம் பேசிய பிறகு அடுத்து ஒருவர் வந்து ஏதேதோ கணக்குப் போடத்தொடங்கினார். அவர் ஒரு 300 ரூபாய் குறைத்தார். இன்னும் எவ்வளவுதான் குறைப்பீர்கள் என்று கேட்டேன். அடுத்து முதலாளியைப் பார்க்கச் சொன்னார். அவர் மறுபடியும் முதலிலிருந்து கணக்கு போடத்தொடங்கினார். அவர் ஒரு 200 ரூபாய் குறைத்தார்.

நான் இன்னும் 500 ரூபாய் குறைக்கச்சொல்லிக் கேட்டேன். குறைக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். நானும் வேறு கடையில் வாங்கிக்கொள்கிறேன் என்று வந்துவிட்டேன். மறுபடியும் இன்று புதுவையில் இருக்கும்  பிரபல நகைகடைக்குச் சென்றேன். எங்கள் கடையில் ஒரே விலை, பேரம் கிடையாது என்று கூறிவிட்டார்கள்.நானும் சனியன் ஒழிகிறது என்று 5% சேதாரம் அழுதுவிட்டு ஒரு பவுனில் ஒரு செயின் வாங்கி வந்தேன். நகைக்கடைக்குச் சென்றால் இதெல்லாம் சாதாரணம்தானே ,இதற்கு எதற்கு ஒரு பதிவு என்றுதானே நினைக்கிறீர்கள்.இப்படி நினைத்துத்தான் தினம்தினம் நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம். சேதாரம் என்னும் பெயரில் நம் முதுகில் தினமும் ஏறிக்கொண்டு நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேதாளத்தைப்பற்றிய பதிவுதான் இது.

இலண்டனில் ஒரு பெண்மணி நகைக்கடைக்குச் சென்றிருக்கிறார். சேதாரம் எல்லாம் கொடுத்து ஒரு நகையை வாங்கியிருக்கிறார். பிறகு நேராக நுகர்வோர் கோர்ட்டுக்குச் சென்று நகையின் விலையைவிட அதிகமாக எதற்குச் சேதாரம் கொடுக்க வேண்டும் என்று ஒரு வழக்கைப் பதிவு செய்துவிட்டார்.. அப்புறம் என்ன , சேதாரம் என்று வாங்கிய தொகையை திரும்பவும் பெண்மணியிடம் திருப்பித்தருமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.  என்னதான் சொல்ல வர்ர என்றுதானே கேட்கிறீர்கள்.
உண்மையில் எந்தவொரு நகைக்கடைக்காரருக்கும் சேதாரம் என்று எந்தவொரு சேதமும் நிகழ்வதில்லை.அவையெல்லாம் நம்மை ஏமாற்ற அவர்களுக்குக் கிடைத்திருக்கும் அஸ்திரமே என்பதை நீங்கள் எப்போது உணரப்போகிறீர்கள்? பொற்கொல்லர்கள் நகை செய்யும்போது அதிலிருந்து விழும் கண்ணுக்குத் தெரியாத துகள்களைக்கூட மீண்டும் பெருக்கியெடுத்து உருக்கி விடுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?  அப்புறம் எங்கே நேர்கிறது சேதாரம்? இனிமேலாவது விழிப்போடு இருங்கள்.0% முதல் 7%வரை சேதாரமும் ஏமாற்று வேலையே, 9.99% சேதாரமும் ஏமாற்று வேலையே...


இனி எந்த நகைக்கடைக்குச் சென்றாலும் ஏன் சேதாரம் கொடுக்க வேண்டும் என்று  கேள்வி கேளுங்கள்.உங்கள் வெறித்தனமான கேள்விகளால் விற்பனையாளரை விழிபிதுங்கச்செய்யுங்கள். அப்புறம் 916 நகை என்று கூறுவார்களே கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதுவேறு ஒன்றும் இல்லை. சாதாரண 22 கேரட் தங்கத்தையே 916 நகை என்று கூறி செப்படி வித்தையெல்லாம் காட்டுகிறார்கள். அதாவது சுத்தமான தங்கத்தை 24 கேரட் என்று கூறுவது வழக்கம்.நகை செய்யும்போது 22 பங்கு தங்கமும் 2 பங்கு செம்பும் கலந்து செய்வதை அனைவரும் அறிவீர்கள் அல்லவா? 24 கேரட்டில் 22 பங்கை சதவீதம் ஆக்கிப்பாருங்கள், 91.6% வரும்.இந்த சாதாரண 22 கேரட் தங்கத்தையே 916 நகை அப்படி இப்படி என்று கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

  என்னதான் நான் புலம்பித்தீர்த்தாலும் பெண்களின் நகை மோகம் தீரும்வரை ,வரதட்சணை என்னும் கொடிய பேய் ஒழியும்வரை  இத்தகைய ஏமாற்று வேலைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்


11 comments:

 1. தங்களுக்கு விளக்கமாக சொல்ல விரும்புகிறேன் - ஒரு நகை செய்யும் தொழிலாளியின் பார்வையிலிருந்து. சேதாரம் என்றால் என்ன என்பதை முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன். நீங்கள் 5% சேதாரம் கொடுத்ததாக சொல்கிறிர்களே - அதை கடைக்காரர் மாத்திரம் எடுத்து கொள்ள போவதில்லை. அதை செய்கிற பொற்கொல்லருக்கு 2% அல்லது 2.5% சதவிதம் - அந்த செயின் செய்வதற்கு கொடுத்தாக வேண்டும். இரண்டு பவுன் செயின் என்றால் பொற்கொல்லருக்கு தரப்படும் 2.5% சதவிதம் என்பது நானூறு மில்லி ஆகும். அதையும் அந்த பொற்கொல்லரே முழுமையாக எடுத்து கொள்ள போவதில்லை. ஒரு தங்கக்கட்டி செயினாக மாறுவதற்கு மூன்று நான்கு பேர் கை மாறுகிறது. தங்கக்கட்டி செயின் செய்ய ஏற்ற வடிவம் பெற கம்பிகளாக முதலில் மாற்றப்பட வேண்டும். மேலும் சில வேலைகளுக்கு பிறகு தான் அது நகை தொழிலாளியால் செயினாக உருமாறும். பிறகு மெருகு போட, பட்டை வெட்ட என பல்வேறு வேலைகளுக்கு சென்று கடைசியாக நகைக்கடைக்கு பளபளக்கும் செயினாக வரும். நீங்கள் கொடுத்த 5% சதவிதம் - நகை தொழிலாளிக்கு 2% முதல் 2.5% சதவிதம் (0.400 மில்லி) கொடுக்கப்படும் என்றேன் இல்லையா - அது அந்த செயினை தங்கக்கட்டியிலிருந்து கம்பியாக்க துவங்கி முடிவாக பட்டை வெட்டுகிறவர் வரை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. முப்பது மில்லி, நாற்பது மில்லி என்று. அவர்களின் பணிக்கு அவை தான் கூலி. இப்படி எல்லோருக்கும் கொடுத்தது போக அந்த செயின் செய்யும் நகை தொழிலாளிக்கு - ஒரு நாள் உழைப்பில் அந்த செயின் செய்ததற்காக கிடைப்பது முன்னூறிலிருந்து முன்னூற்றி ஐம்பது ரூபாய் - நீங்கள் கடைக்காரருக்கு கொடுத்த 5% சதவித சேதாரத்திலிருந்து - நகை தொழிலாளி பெறுவது அவ்வளவு தான். ஒரு நாள் உழைப்புக்கு ஒருவருக்கு முன்னூற்றி ஐம்பது ரூபாயாவது வேண்டாமா? நீங்க கடைக்காரரிடம் பேரம் பேச பேச கடைக்காரர் குறைத்து கொண்டே வருவார். ஆனால் தன் லாபத்திற்கு கேடு வராத அளவுக்கு - நீங்கள் குறைக்கும் சேதாரத்தை, அந்த நகை தொழிலாளியின் வயிற்றிலடித்து மிச்சம் பிடிப்பார். இது தான் யதார்த்தம். அதனால் சேதார கொள்ளை என்பது மிகையான வார்த்தை நண்பரே. நகை தொழிலாளிகளை சங்கடப்படுத்தும் வார்த்தையும் கூட.

  ரே. நகை தொழிலாளிகளை சங்கடப்படுத்தும் வார்த்தையும் கூட.

  அன்புடன்
  ஒரு நகை தொழிலாளி

  ReplyDelete
  Replies
  1. En manaivi appathivai ezhuthumpothe vendam enru koorinal.Inimel yar manathaiyum kaayapaduthum pathivugalai ezhuthamaten.Ungal manathai kayapaduthi irunthal ennai mannikkavum nanbare. I am replying in my mobile.so only english.

   Delete
 2. தேவையான தகவலை சரியான நேரத்தில் சொல்லியிருக்கும் பதிவு.. நகைத்தொழிலாளி நண்பர் சொன்னது போல் பார்த்தாலும், இன்று சோற்றுக்கே கஷ்டப்படும் ஏழை கூட ஒரு கிராம் ரெண்டு கிராமாவது நகை வாங்கி தான் திருமணம் போன்றவற்றை செய்கிறான்.. இதை ஏன் மக்களின் மீது சேதாரம் என திணிக்க வேண்டும்? சரி சேதாரத்தில் இருந்து சம்பளம் கிடைக்கிறது என்றால், பின் செய்கூலி என்றால் என்ன? என் சந்தேகத்தை தான் கேட்கிறேன்.. நண்பர் கொஞ்சம் விளக்கவும் :-)

  ReplyDelete
  Replies
  1. Itha ketta nambala kettavanu smlranga nanba.enaku support panna neenga orutharavathu irukeengale.Thanks nanba.

   Delete

  2. செய்கூலி கடைக்காரருக்கு சேர்ந்துவிடும். மேலும் இப்போது நிறைய கடைகளில் கூலி இல்லை. நுகர்வோருக்கு எல்லா விதத்திலும் நன்மை பயக்கும் விதத்தில் தான் தங்க நகை விற்பனை உள்ளது. நீங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்கிற அச்சம் எப்போதும் வேண்டாம். நன்றி. என் கருத்துரையை வெளியிட்டமைக்கு.

   அன்புடன்
   நகை தொழிலாளி

   Delete
 3. Replies
  1. கருத்துரைக்கு நன்றி தோழரே.

   Delete
 4. சேதாரத்திற்கு ஏதும் ஆதாரம் இல்லை என நினைத்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

  ReplyDelete