Tuesday, 2 April 2013

உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் மொபைல் பேங்கிங் வசதியைப் பெறுவது எப்படி?

 நம்மில் நிறைய பேர் ஆன்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதிலிருக்கும் பல்வேறு வசதிகளை நாம் அறிவதில்லை.இன்றைய பதிவில் உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் மொபைல் பேங்கிங் வசதியைப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

உங்கள் மொபைலில் GPRS PACK போட்டிருந்தால் நல்லது. முதலில் உங்கள் மொபைலில் < MBSREG> < உங்கள் மொபைல் கம்பனி> <மொபைல் மாடல்> டைப் செய்து 567676 என்ற எண்ணுக்கு SMS செய்யவும்.(எடுத்துக்காட்டு
MBSREG SAMSUNG 6102 ).உடனே உங்கள் மொபைலுக்கு ஒரு USER ID யும் ஒரு பாஸ்வேர்டும் கிடைக்கும்.அதைக் குறித்து வைத்துக்கொள்ளவும். SMSக்கு 3 ரூபாய் செலவாகும் ,அதையும் சொல்லிவிடுகிறேன்.

அடுத்தது நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைலில் GOOGLE PLAY STOREல் சென்று STATE BANK FREEDOM என்ற அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். அந்த அப்ளிகேஷனை ஓப்பன் செய்து உங்களிடம் இருக்கும் USER ID மற்றும் பாஸ்வேர்டைக்கொடுத்து LOGIN செய்துகொள்ளுங்கள்.  CHANGE MPIN  OPTIONஇல் சென்று பாஸ்வேர்டை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம்.

HDFC,ICICI  ஆகிய வங்கிகளின் அப்ளிகேஷன்களும் ஆன்ட்ராய்டு மொபைலில் கிடைக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டிய கடைசி வேலை நேராக உங்கள் ATM சென்டருக்கு சென்று உங்கள் கார்டை செருகி SERVICES ஆப்ஷனில் சென்று MOBILE BANKING REGISTRATION சென்று MOBILE NUMBER  கொடுத்து என்டர் செய்யவும். அதன்பின் உங்கள் மொபைலுக்கு ஒரு Confirmation message  வரும்.அவ்வளவுதான் முடிந்தது .இனி உங்கள் மொபைலில் மொபைல் பேங்கிங் வசதியைப் பயன்படுத்தலாம்.

 சந்தேகம் இருந்தால் என்னைத்தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு-9940970456

4 comments:

  1. உங்கள் கருத்து மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன் தோழரே… தொடர்கிறேன்...

    மொபைல் பேங்கிங் வசதி - பலருக்கும் புரியும்படி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. உங்கள் உதவிக்கு நன்றி

    ReplyDelete