இந்தியர்களின் வளர்ச்சியின்மைக்கும் சோம்பேறித்தனத்திற்கும் முக்கியக் காரணமே இந்த மூடநம்பிக்கைகளும் சகுனங்களுமே..விண்வெளியில் விவசாயம் செய்வது எப்படி என்று விஞ்ஞானிகள் விடை தேடிக்கொண்டிருக்கும் இந்த அறிவியல் யுகத்தில் கூட நம் இந்தியர்கள் இன்னும் சமைப்பதற்குக்கூட சகுனம் பார்ப்பதைத்தான் சகித்துக் கொள்ளமுடியவில்லை..
பூனை குறுக்கில் வந்தால் பொல்லாத சகுனம் என்பார்கள்...நரி நடுவில் வந்தால் நல்ல சகுனம் என்பார்கள்.. விதவைப்பெண்கள் எதிரில் வந்தால் அந்த நாள் வீணாய்ப் போய்விடும் என்பார்கள்..இந்தியாவில் இன்னும் இதுபோன்ற நம்பிக்கைகளோடு இருபது கோடிக்கும் மேற்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..
தமிழ்க்கலாச்சாரம் அறிவியல் பூர்வமானது என்று ஏற்கனவே ஒரு பதிவில் கூறியிருந்தேன்..ஆனால் அதே தமிழகத்தில்தான் இதுபோன்ற முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளும் அதிகம் இருக்கின்றன..
ஒரு விதவைப் பெண்ணும் குழந்தையில்லாத பெண்ணும் நம் நாட்டில் நிம்மதியாக வாழ்வது என்பது எளிதான விஷயமல்ல..யாரோ ஒருவர் வெளியில் போகும்போது ஒரு விதவைப்பெண் எதிரில் வந்துவிட்டால் என்ன டயலாக் வரும் என்பது நீங்கள் அறிந்த்துதானே..சனியன் எதரக்க வந்துடுச்சா இன்னைக்கு நாள் உருப்பட்ட மாதிரிதான் என்பார்கள்..அவர் என்னமோ ஐ.நா சபையில போய் ஆட்ட போற மாதிரி பேசுவார்..கவுண்டமணி சொல்ற மாதிரி அந்த முக்குல போய் பிச்சை எடுக்கப்போற நாயிக்கு பேச்சப்பாரு எகத்தாளத்தப் பாரு..
திடீரென்று எங்கிருந்து இவ்வளவு ஞானம் வந்தது என்றுதானே கேட்கிறீர்கள்..பராசக்தி படத்தில் சிவாஜி சொல்வதுபோல நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன்..ஆமாம் சுயநலத்திலிருந்துதானே பொதுநலம் பிறக்கிறது..
திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் எனக்கு இன்னும் குழந்தை இல்லை..எனக்கும் என் மனைவிக்கும் உடல் ரீதியாக பிரச்சினை இல்லை என்று சொல்லிவிட்டார்கள்..சென்றமாதம் என் மனைவிக்கு லேப்ராஸ்கோபிக் சிகிச்சை மூலம் கண்ணுக்குத் தெரியாமல் இருந்த இரண்டு நீர்க்கட்டிகளை நீக்கிவிட்டார்கள்..இந்த மாதம் கரு தங்கிவிடும் என்ற நம்பிக்கை
யோடு இருக்கிறேன்..நம்பிக்கை..அதானே எல்லாம்..இதுக்காக நான் ரொம்ப ஃபீல் பண்ணதில்ல..
ஆனால் இடைப்பட்ட இந்த காலத்தில் என் மனைவி அனுபவித்த கஷ்டங்கள் அதிகம்..உறவினரின் வீட்டு விஷேஷங்களில் எதற்கும் முன்னால் செல்லமாட்டாள்..என் சொந்த மாமன் மகளின் திருமணத்திற்குக் கூட அவள் நலங்கு வைக்கவில்லை..என்னமோ மூனு புள்ள பெத்த மாதிரி முந்திரிக்கொட்டையாட்டம் முன்னாடி வந்து நலங்கு வைக்குது என்று யாராவது சொல்லிவிடுவார்களோ என்ற ஆற்றாமை..
இதுபோன்ற மனிதர்களின் குணம் எப்பொழுதுதான் மாறும்..மற்றவர்களுக்கும் மனம் இருக்கும் என்பதை அறியாமல் புரளிபேசும் இதுபோன்ற மனிதர்கள் இருக்கும்வரை இந்தியா இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆனாலும் முன்னேறாது..
தன்முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகளை வைத்துக்கொண்டு பிறர் முதுகைப்பார்ப்பவர்களை என்னவென்று சொல்வது..விவேக் சொல்லற மாதிரி இன்னும் நூறு பெரியார் வந்தாலும் உங்களலாம் திருத்தவே முடியாதுடா....

vazthukkal sir sikkiramoru azakana kuzanthai pirakka..
ReplyDeletemaththa padi ninga sonna ellam visaiyathilum ungala vazi mozikiren
அந்த நம்பிக்கையில்தான் வாழ்கிறேன்..நன்றி நண்பா..
ReplyDeleteஉங்களின் ஆதங்கமும், வருத்தமும் புரிகிறது... மற்றவர் சொல்வதை சிறிதும் கேட்காமல் விலகி விடுங்கள்... முன்னே பின்னே தெரியாதவர்களை கூட பரவாயில்லை எனலாம்... ஆனால் உறவுக்காரர்கள் இருக்குறார்களே... ...ம்...
ReplyDeleteவிரைவில் நல்ல செய்தி பதிவு செய்வீர்கள்... வாழ்த்துக்கள்...
நன்றி தோழரே..
ReplyDeleteதலைப்பை பார்த்தவுடன், நிறைய மூட நம்பிக்கைகளை பற்றி அலசுவீர்கள் என நினைத்தேன்... :-)
ReplyDeleteஇதற்கு மேல் சரக்கு இல்லை போல என்று நினைத்துக் கொள்ளாதீர்கள் நண்பரே..தனிமையும் நேரமும் கிடைப்பதில்லை..அதனால்தான் என்னுடைய எல்லா பதிவுகளுமே சொல்லவந்த கருத்தை முழுமையாக தெளிவாக சொல்லாமல் சுருக்கமாகத்தான் எழுதியிருப்பேன்..காரணம் என்னுடைய மனைவிக்கு நான் சிஸ்டத்தில் உட்கார்ந்தாலே பிடிக்காது..என் மீது அதிக பாசம் கொண்டவள்..அவளின் உணர்ச்சிக்கு மதிப்பு கொடுத்து பதிவுகளை முடிந்தவரை சுருக்கமாக முடித்துவிடுவேன்..எதிர்காலத்தில் சிறந்த பதிவுகளை எழுத முயற்சிக்கிறேன் நண்பா.
DeleteAndhra Pradesh ITI Admission Merit List
ReplyDeleteITI Merit List