Wednesday, 24 April 2013

கிறிஸ் கெயிலும் அவரது ஸ்டைலும்..

  கிரிக்கெட் ஜாம்பாவான் சச்சினுக்கு இன்று நாற்பதாவது பிறந்தநாள்..அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக என்னுடைய வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டு ,முதன்முதலாக ஒரு கிரிக்கெட் பதிவு எழுதலாம் என்று.....(சகித்துக்கொள்ளுங்கள்)...

போன பதிவில சொன்ன மாதிரியே நான் இசைக்கு மட்டும் மயங்குற கேஸ் இல்ல  கிரிக்கெட்டுக்கும் அப்படித்தான்...ஆசிரியர் பயிற்சி படிக்கும் போது ,மறுநாள் கணிதத்தேர்வை வைத்துக்கொண்டு இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் பாத்த ஆளுங்க நாங்க...

கிரிக்கெட் பதிவு எழுதற அளவுக்கு பெரிய கிரிக்கெட் வீரரா நீ ..அப்படிலாம் கேக்கக்கூடாது..(பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்..)..நாம எப்பவுமே டக் அவுட் கேஸ்தான் பாஸ்..(நாங்க உண்மைய ஒத்துக்கற பரம்பரைங்க)..

ஆனா பவுலிங் மட்டும் கொஞ்சம் நல்லா போடுவன்னு ஊர்ல எல்லாரும் சொல்றாங்க..ஆமாங்க கை பிரேக் கால் பிரேக்கெல்லாம் போடுவங்க(லெக் பிரேக் ஆஃப் பிரேக் மாதிரி இதுவும் ஒரு டைப்)..

சரி சரி கோச்சிக்காதீங்க மேட்டருக்கு வந்துடறன்..நேற்று இரவு நடந்த பெங்களூர்-புனே அணிகளுக்கு இடையான ஐபிஎல் மேட்ச் பார்த்தீங்களா..
கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரில் ஒரு தானே புயல் அடித்து ஓய்ந்தது போலிருந்தது..

பெங்களூரில் மையம் கொண்ட அந்த புயல் வடமேற்காக நகர்ந்து புனேயைத் தாக்கியது.அப்பப்பா...அடியா அது..சிங்கம் படத்துல சூர்யா சொல்லற மாதிரி ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெய்ட்டுடா என்பதுபோல் இருந்தது ஒவ்வொரு ஷாட்டும்..

முகத்தில் எந்தவொரு பயமும் இன்றி அடித்த ஒவ்வொரு சிக்சரும் சூப்பர்..ட்விட்டரில் ஒரு கிரிக்கெட் வீரர் கூறியதைப்போல் நேற்றைய ஆட்டத்தில் ஃபீல்டர்கள் எல்லோரும் வெறும் பார்வையாளர்களாகவே இருந்தனர்..பார்வையாளர்களே ஃபீல்டிங் வேலையைச்செய்தனர்..

புனே பவுலர்கள்தான் பாவம்...அதிலும் அசோக் டின்டா ஒவ்வொரு ஆட்டத்திலும் அடி வாங்குகிறார்..புனே அணியின்  புவனேஸ்வர் குமார் மட்டும்தான் கொஞ்சம் தப்பித்தார் கெய்லின் அதிரடியில் ..

ஒன்றா,இரண்டா ஒரே நாளில் மூன்று உலக சாதனைகள்..20 ஒவர் போட்டியில்  ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர்-263 ரன்கள், ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர்-175 ரன் (66 பந்துகள்), அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட மேட்ச் -17 சிக்சர்கள்..மேலும் ஒரு சாதனையாக ஒரே மேட்சில் மூன்று உலக சாதனைகள் படைத்து  அதையும் ஒரு சாதனையாக்கி இருக்கிறார் கிறிஸ் கெயில்..

அவர் வெளிநாட்டு வீரராக இருந்தாலும் திறமையுள்ள வீரரை மதிக்க வேண்டும்..கிரிக்கெட்டை ரசிப்பவர்கள் ஒவ்வொருவரும் கெய்லையும் ரசிப்பார்கள்..
கடைசி வரை களத்தில் நின்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.இன்னும் பந்துகள் இருந்திருந்தால் 20 ஓவர் கிரிக்கெட்டில் 200 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்திருப்பார்...கடினமான பந்துகளை தேவையில்லாமல் அடித்து அவுட்டாகாமல் சிங்கிள்களாக ஆடியது ரசிக்கும்படியாக இருந்தது..நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ரசிக்கும்படியான ஒரு மேட்சை விருந்தளித்த கெய்லுக்கு ஒரு சல்யூட்...


8 comments:

  1. gayle out illa sir......

    ReplyDelete
    Replies
    1. தவறைத் திருத்திவிட்டேன் நண்பா..தவறைச் சுட்டிக்காட்டியமைக்கும் தளத்திற்கு வந்தமைக்கும் நன்றி..

      Delete
  2. nalla pathivu.

    enakkum music cricket ungala polave pidikkum.

    match nanum kandu racichen ..

    ReplyDelete
  3. நல்ல ரசித்து எழுதி இருகீங்க

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி..

      Delete
  4. ஒவ்வொரு அடியும் இடி தான்...

    லிட்டில் மாஸ்டருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. என்ன இன்னும் வரவில்லையே என்று எதிர்பார்த்திருந்தேன்..நன்றி தோழரே..

      Delete