பயணங்கள் நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.சில பயணங்கள் வாழ்க்கைப்பாதையையே கூட மாற்றிவிடும்.கோயம்பத்தூர் பயணம் எனக்கும் நிறைய படிப்பினையைத்தந்தது. நான்கு முறை என் நண்பன் புண்ணியமூர்த்தியுடன் பைக்கில் கோவை சென்றிருக்கிறேன். எனக்கு கோவை பிடித்துப்போனதற்கு பல காரணங்கள் உண்டு.பெரிய நகரமும் இருக்கும்,ஆனால் ஒரு அமைதியும் இருக்கும். அனைத்து மனிதர்களிடமும் மனிதாபிமானம் இருக்கும். நகர வாழ்க்கை வாழ்ந்தாலும் அங்கே தமிழ் கலாச்சாரம் இருக்கும். வீட்டு வாசலில் சாணமிடுவது, பெண்கள் கழுத்தில் தாலிக்கயிறு அணிவது அங்கே நகரத்திலும் மேல்குடி மக்களிடமும் காணமுடியும்.நம் புதுச்சேரியில் கிராமங்களில் கூட இவற்றைக் காணமுடிவதில்லை. கோவையைச்சுற்றிலும் உள்ள மருதமலை,பொள்ளாச்சி, சிறுவாணி, ஆழியாறு,திருமூர்த்தி அருவி,ஈஷா யோகா மையம் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்த இடங்கள்.நானும் என் நண்பனும் எப்பொழுதும் இரவில்தான் பயணத்தைத் தொடங்குவோம்.வழியில் கோவில் ,பள்ளி போன்ற இடங்களில் எங்காவது உறங்குவோம். எங்கு வேண்டுமானாலும் குளிப்போம். இயற்கையை ரசிப்போம். நீங்களும் ஒருமுறை கோவை சென்று பாருங்கள். மனிதாபிமானமுள்ள மனிதத்தைக் காண்பீர்கள். இன்னும் நிறைய பேச ஆசை. வார்த்தைகள் கிடைக்கவில்லை.அடுத்த பதிவில் தொடர்கிறேன்.நன்றி.
iti admission online
ReplyDeleteiti admission date 2018 maharashtra