Friday 5 April 2013

உணர்வுள்ள உயிருள்ள சமுதாயம் எப்போது தோன்றும்?

நம்முடைய வாழ்வில் பலவிதமான மனிதர்களைப் பலவிதமான சூழல்களில் காண்கிறோம். ஒரு சில சூழல்கள் உங்களுக்காக..

ஒரு பயணி பேருந்தில் பயணிக்கிறார். நடத்துனரிடம் பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்குகிறார். நடத்துனர் இரண்டு ரூபாய் சில்லரை பிறகு தருகிறேன் என்று கூறிவிடுகிறார்.

அப்பொழுது ஒரு பிச்சைக்காரர் பேருந்தில் ஏறி மேற்குறிப்பிட்ட பயணியிடம் ஐயா தர்மம் செய்யுங்க என்று கேட்கிறார்.பயணி பிச்சைக்காரரைப் பார்த்து உனக்கு என்ன கேடு ? உழைத்துச்சாப்பிட்டால் என்ன என்று கேட்டு உதாசீனப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.

பிறகு அப்பயணி பேருந்தைவிட்டு இறங்கும் நேரம் நடத்துனரிடம் மீதி இரண்டு ரூபாய் சில்லரை கேட்க நினைக்கிறார்.ஆனால் அருகில் நிறைய இளம்பெண்கள் ...இரண்டு ரூபாய் சில்லரையைப்போய் எப்படி  கேட்பது என்று அசிங்கப்பட்டுக்கொண்டு பேருந்தைவிட்டு இறங்கிவிடுகிறார்.

இச்சூழலில் யார்மீது தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்னுடைய கருத்து -உழைத்துச்சாப்பிடு என்று உரிமையுடன் கூறினாயே பிச்சைக்காரனை நீ உழைத்துதானே சம்பாதித்தாய் பிறகேன் கேட்கவில்லை உரிமையோடு சில்லரையை.....

இத்தகைய மனநிலையே இன்றைய மனிதர்களிடம் வளர்ந்து வருகிறது.பக்கத்து வீட்டுக்காரன் பார்த்து விடுவானோ,?, எதிர்வீட்டுக்காரன் என்ன நினைப்பானோ என்று நினைத்தே பல நல்ல விஷயங்களை நாம் செய்யத்தயங்குகிறோம்.

மாரியம்மன் கோயில் கூழ் ஊற்றும் திருவிழாவிற்கு சுயகௌரவத்திற்காக
  5000 ரூபாய் நன்கொடை தரும் ஊர் பெரியமனிதர்,பக்கத்துவீட்டு மாரியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் ஒரு 100 ரூபாய் தர முன்வருவதில்லை.மனிதாபிமானமெல்லாம் இப்போது மரத்துப்போய்விட்டது.
 எதிர்கால சமுதாயம் உணர்ச்சியில்லா  உயிரில்லாமல் ஆகிவிடுமோ என்ற பயம் ஏற்படுகிறது.

அன்பான பெற்றோர்களே, ஆசிரியபெருமக்களே உங்கள் குழந்தைகளுக்கு மனிதாபிமானம் மறந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,உறவுகளை உடைக்காமல் இருக்க ஊகப்படுத்துங்கள்.உணர்வுள்ள உயிருள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்க முயல்வோம்..இப்பதிவைப்படிக்கும் இரண்டு பேராவது மனம் மாறினால் எனக்கு மகிழ்ச்சியே....அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி




7 comments:

  1. ஒவ்வொருவரும் உணர வேண்டும்...

    குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றதற்கு பாராட்டுக்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    ReplyDelete
    Replies
    1. Ippathan laptop close panni vachan.ithukku mela open panni vachiruntha en wife mugatha pakkaa mudiyadhu..Now i am commenting from my my mobile.mobila tamil typing theriyala .so only english.Ungal karuthuraikku nanri thozhare.
      Blogla nan oru kathukutti. Thavarugalai sutti kaatiyamaikku nanri. Thiruthikolgiren thozhare.nanri.

      Delete
  3. //இத்தகைய மனநிலையே இன்றைய மனிதர்களிடம் வளர்ந்து வருகிறது.பக்கத்து வீட்டுக்காரன் பார்த்து விடுவானோ,?, எதிர்வீட்டுக்காரன் என்ன நினைப்பானோ என்று நினைத்தே பல நல்ல விஷயங்களை நாம் செய்யத்தயங்குகிறோம்.
    //- சரியாக சொன்னீர்கள். நிறைய விஷயங்களில் இயல்பாக வாழ தவறுகிறார்கள்.
    Word verification பற்றி முன்பே நான் சொல்ல நினைத்தேன். தனபால் அவர்கள் சொல்லியுள்ளது போல் அதை நீக்கிவிடுங்கள். Word verification கருத்து சொல்ல வர்றவங்க கூட சொல்லாம போயிடுவாங்க. முதலில் அதை நீக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. Word verification neekkivitten thozhiye.Ennaiyum mathithu karuthurai vazhangiyamaiku nanri.ungal kavithaigal anaithum arumai.

      Delete
  4. first time na unga blog padikka vanthen..
    muthal pathivu good 1..

    sonna karuththu 100% correct..


    vazthukkal..


    ReplyDelete
    Replies
    1. என்னையும் மதித்து கருத்துரை வழங்கியமைக்கு நன்றி.

      Delete