Tuesday 16 April 2013

உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் எழுதுவது எப்படி ?

  புதிதாக ஆன்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இப்பதிவை எழுதுகிறேன்..

உண்மையில் சொல்லப்போனால் ஒருமாதம் முன்புவரை என்னுடைய மொபைலில் எனக்கு தமிழில் எழுதத்தெரியாது.  எப்படியோ என் நண்பன் ஒருவனின் உதவியோடு கடந்த ஜூலை மாதம்தான் ப்ளாக் தொடங்கினேன்.
ஆனால் தமிழில் எழுதத்தெரியாத காரணத்தாலேயே  ஏறத்தாழ 8 மாதங்கள் என்னுடைய ப்ளாக்கில் எதுவுமே எழுதாமல் இருந்தேன்..

எப்படியோ இந்த மார்ச் மாதம்தான் ஏதோ ஒரு அசட்டு நம்பிக்கையில் இகலப்பை மென்பொருளை என் கணினியில் நிறுவி எழுதத்தொடங்கினேன்.
தமிழில் எழுத இதைவிட சிறந்த ஒரு மென்பொருள் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை..

லேப்டாப்பில் ஒருநாளைக்கு ஒருமணி நேரம் அளவுக்குத்தான் அனுமதி...அதற்குமேல் சிஸ்டத்தில் உட்கார்ந்திருந்தால் என் மனைவியின் முகத்தைப் பார்க்க முடியாது...எப்பவும் சிஸ்டத்துலே உக்காந்து இருக்கீங்க,,என்னை கண்டுக்கவே மாட்ரீங்கனு சொல்ல ஆரம்பித்துவிடுவாள்..அவளின் உணர்வுக்கும் கொஞ்சம் மரியாதை கொடுத்து லேப்டாப்பை மூடிவைத்து விடுவேன்..

நண்பர்கள் பலரின் பதிவுகளையும் மனைவி பார்க்காத நேரத்தில் மொபைலில் படிப்பேன்..அப்பதிவுகளுக்கு கமெண்ட் எழுதவேண்டும் என்று நினைப்பேன்.
ஆனால் மொபைலில் தமிழில் எழுதத் தெரியாது என்பதால் அப்படியே விட்டுவிடுவேன்..மறுபடியும் லேப்டாப்பைத் திறந்தால் அவ்வளவுதான்...புரிகிறதா...

எப்படியாவது ஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் எழுத வேண்டும் என்று முடிவுசெய்தேன்..PLAY STOREல் தேடியபொழுது தமிழ்விசை என்ற அப்ளிகேஷனைக்கண்டறிந்தேன்.. என்னைப் போன்றவர்களுக்கு உதவுமே என்ற எண்ணத்தில்தான் இப்பதிவு தோன்றியது..

TAMILVISAI  மென்பொருளை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். SETTINGS சென்று  LOCALE AND TEXT செலக்ட் செய்து

INPUT METHOD என்ற ஆப்ஷனை கிளிக் செய்து TAMILVISAI செலக்ட் செய்யவும்..அவ்வளவுதான் இனி உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் நீங்கள்  தமிழில் எழுதலாம்..என்னை மாதிரியே...



3 comments:

  1. ஏன் sellinam என்று ஓர் அருமையான தமிழ் விசை கூட playstore ல் உள்ளதே...!

    ReplyDelete
  2. கூகிள் வலைப பதிவை பொருத்தவரை அதிலேயே தமிழில் எழுத வசதி உள்ளது. மற்றும் NHM writer என்ற புகழ் பெற்ற மென்பொருளும் உண்டு. ஆண்ட்ராய்டு மொபைல் இன்னும் வாங்கவில்லை

    ReplyDelete
    Replies
    1. NHM writer பற்றி தெரியாது..வருகைக்கு நன்றி.

      Delete